கடைசில பயம் காட்டிய நபி, அசால்ட்டா தூக்கிய முகேஷ் குமார் – ஆப்கானிஸ்தான் 158 ரன்கள் குவிப்பு!

இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 158 ரன்கள் எடுத்துள்ளது.

Afghanistan Scored 158 runs against India in First T20I Match at Mohali rsk

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தற்போது மொஹாலியில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணியில் விக்கெட் கீப்பர் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் கேப்டன் இப்ராஹிம் ஜத்ரன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி நிதானமாக ரன்கள் சேர்த்தனர்.

மொஹாலியில் கடும் குளிர் – ஹாட் வாட்டர் பேக் பயன்படுத்திய இந்திய வீரர்கள்!

இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் குவித்ததது. ரஹ்மானுல்லா குர்பாஸ் 23 ரன்களில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஷிவம் துபே ஓவரில் இப்ராஹிம் ஜத்ரன் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹ்மத் ஷா 3 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய முகமது நபி, அஸ்மதுலல உமர்சாய் உடன் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்.

India vs Afghanistan T20I: யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏன் இடம் பெறவில்லை? இதோ வெளியான காரணம்!

கடைசியாக நபி 42 ரன்கள் எடுத்த நிலையில், முகேஷ் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். உமர்சாய் 29 ரன்களில் ஆட்டமிழக்க, நஜிபுல்லா ஜத்ரன் 19 ரன்களும், கரிம் ஜனத் 9 ரன்களும் எடுக்கவே ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில், முகேஷ் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஷிவம் துபே ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் – 3 ஸ்பின்னர், 2 ஃபாஸ்ட் பவுலர்களை களமிறக்கிய இந்தியா – ஷிவம் துபேவிற்கு வாய்ப்பு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios