Asianet News TamilAsianet News Tamil

எப்படியும் 6 டீம் வெளிய போயிடும் - லாஸ்ட்டுல ஃபர்ஸ்ட் யாரு வர்றாங்களோ அவங்க இங்கிலாந்துக்கு ஃபர்ஸ்டா போவாங்க!

வரும் மே 21 ஆம் தேதி எப்படியும் 6 அணிகள் வெளியேறிவிடும். அப்படியிருக்கும் அதில் உள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் முன் கூட்டியே இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
 

Rohit Sharma Planning About WTC Final 2023
Author
First Published Mar 15, 2023, 10:42 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை இந்தியா 2-1 என்று கைப்பற்றியது. இதே போன்று நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா முதல் அணியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. தற்போது 2ஆவது அணியாக இந்தியா தகுதி பெற்றதைத் தொடர்ந்து வரும் ஜூன் 7 ஆம் தேதி ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது.

No Look Six:சொட்ட சொட்ட வியர்வை சிந்தி பயிற்சி செய்யும் தோனி: சிக்சர் விளாசியும் பந்தை பார்க்காத வீடியோ வைரல்!

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் முடிந்த நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்க இருக்கிறது. வரும் 17 ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதே போன்று காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயரும் பங்கேற்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

மகிழ்ச்சியின் உச்சகட்டம், நார்வே நாட்டு டான்ஸ் குழுவோடு சேர்ந்து டான்ஸ் ஆடிய விராட் கோலி!

இரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி வரும் 22 ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதையடுத்து ஒரு வார இடைவெளியில் வரும் 31 ஆம் தேதி 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடங்கி வரும் மே 28 ஆம் தேதி வரையில் நடகிறது. இந்த ஐபிஎல் சீசன் முடிந்த உடனே இந்திய அணி உலக டெஸ்ட் சாபியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இங்கிலாந்து புறப்படுகிறது.

ஒரு ஓவரில் 4 சிக்சர்கள் அடிக்கிறேன்; மனசாட்சி சொல்லியிருச்சு - ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக்!

இந்த நிலையில், இது குறித்து பேசிய ரோகித் சர்மா கூறியிருப்பதாவது: வரும் மே 21 ஆம் தேதி 6 ஐபிஎல் அணிகள் தொடரிலிருந்து வெளியேறிவிடும். அந்த அணிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களை முன் கூட்டியே இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கும் திட்டம் இருக்கிறது. பயிற்சி மேற்கொள்வதற்காக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிகப்பு நிற பந்து தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று கூறியிருந்தார்.

களைகட்டத் தொடங்கிய ஐபிஎல் டிக்கெட் விற்பனை - எங்கு, எப்படி வாங்கலாம்? டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios