இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் அரை சதம் அடித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா நேற்று இறந்த தனது நாய்க்காக பேட்டை உயர்த்தி காட்டி வானத்தைப் பார்த்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி முதலில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், முதல் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்திலும், 2ஆவது டி20 போட்டியில், இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று சமன் செய்தன. இதையடுத்து வெற்றியை நிர்ணயிக்கும் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
அன்று கருண் நாயர், இன்று இஷான் கிஷான்: லாஸ்ட் இயர் 210, இந்த வருஷம் டீமுலயே இல்லை!
இதையடுத்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒரு நாள் போட்டி இன்று கவுகாத்தி மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் இந்திய அணியின் ரன் கணக்கை தொடங்கினர். தொடர்ந்து பவுண்டரியும், சிக்சருமாக அடித்த ரோகித் சர்மா 41 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து தனது 47 ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் நேற்று இறந்த தனது நாய்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வானத்தைப் பார்த்துவாறு பேட்டை உயர்த்தி காட்டினார்.
இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் இல்லை, உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு: டாஸ் வென்ற இலங்கை பவுலிங்!
இறுதியாக 67 பந்துகளில் 3 சிக்சர்கள், 9 பவுண்டரிகள் உள்பட 83 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா மதுஷங்கா ஓவரில் ஆட்டமிழந்தார். தற்போது வரை இந்திய அணி 24 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தோனி டெக்னிக்கை பின்பற்றிய இந்திய அணி: அஜய் ஜடேஜா பாராட்டு!
இந்தியா அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல், முகமது ஷமி, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சகால் மற்றும் முகமது சிராஜ்.
இலங்கை அணி: பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), அவிஷ்கா பெர்ணாண்டோ, தனஞ்ஜெயா டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷனகா(கேப்டன்), வணிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, துனித் வெல்லாலேஜ், கசுன் ரஞ்சித், தில்சன் மதுஷங்கா.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்குப் பிறகு டி20 போட்டியில் விளையாடாத ரோகித் சர்மா!
