Asianet News TamilAsianet News Tamil

தோனி டெக்னிக்கை பின்பற்றிய இந்திய அணி: அஜய் ஜடேஜா பாராட்டு!

தோனி எப்படி அணியை தேர்வு செய்வாரோ அதே போன்று தான் தற்போதும் இந்திய அணி வீரர்களை தேர்வு செய்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.

Ajay Jadeja Says about India follow MS Dhoni strategy for selecting playing XI
Author
First Published Jan 10, 2023, 1:04 PM IST

இலங்கை அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தார். 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 9 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 112 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியின் இளம் படையினர் சிறப்பாக விளையாடினர். இதன் மூலம் தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்துள்ளார். அதுமட்டுமின்றி இனிமேல் டி20 போட்டிக்கு ஹர்திக் பாண்டியா தான் சிறந்த கேப்டனாக செயல்படுவார் என்று சொல்லும் அளவிற்கு அவரது செயல்பாடு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ்விற்கு வாய்ப்பில்லையா?

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாண்டியா மற்றும் ஒட்டுமொத்த இந்திய அணி நிர்வாகமும் அதிகப்படியான ஆல் ரவுண்டர்களை இந்த டி20 தொடரில் அறிமுகம் செய்தது. இதற்கு முன்னதாக இந்திய அணியின் கூல் கேப்டன் என்று சொல்லப்படும் எம் எஸ் தோனி 11 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்வதில் சிறப்பாக செயல்பாடுவார். அவரைப் போன்று தான் தற்போது இந்திய அணியின் தேர்வுக்குழு ஆல் ரவுண்டர்களை விளையாட வைக்கின்றனர்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்குப் பிறகு டி20 போட்டியில் விளையாடாத ரோகித் சர்மா!

நான் உள்பட என்னிடம் 5 பந்து வீச்சாளர்கள் இருந்தால், நான் பந்து வீசுவேன். அப்படியில்லை என்றால் மிஸ்டர் எக்ஸ், ஒய், இசட் என்று ஒருவரை பந்து வீச வைப்பேன். எனவே நீங்கள் எதிர் அணியாக திட்டமிட வேண்டும். ஒருவேளை என்னிடம் 7 அல்லது 8 பந்து வீச்சாளர்கள் இருந்தால் வெவ்வேறு நிலைகளில் அவர்களால் பந்து வீச முடியும். அப்போது எதிரணியினரால் எப்படி திட்டமிட முடியும்? இது போன்ற விஷயத்தில் மகேந்திர சிங் ஒரு சாம்பியனாக இருந்தார். அதனால், தான் அவரால் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற முடிந்தது என்று கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் கவனிக்க வேண்டிய 7 முக்கியமான வீரர்கள்!

மேலும், ஒரு வேளை ரவீந்திர ஜடேஜா அணியில் இருந்தால் அவரால் பந்து வீச முடியவில்லை என்றால், அணியில் இடம் பெற்றிருக்கும் ஆல் ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோர் பந்து வீசலாம். அதுமட்டுமின்றி அவர்களிடம் பேட்டிங் திறமையும் இருக்கிறது. ஒரு அணியில் அதிகப்படியான ஆல் ரவுண்டர்கள் இருந்தால் என்ன செய்வது என்பது குறித்தும் அஜய் ஜடேஜா விளக்கியுள்ளார்.

இந்திய அணி அதிகப்படியான ஆல் ரவுண்டர்களை பயன்படுத்தினால், அவர்களது பந்து வீச்சு சற்று பலவீனமானதாக இருக்கும். நீங்கள் முதலில் 5 பேட்ஸ்மேன்களை வைத்திருந்தால், அடுத்ததாக 5 முதல் 6 ஆல் ரவுண்டர்களை அணியில் இடம் பெறச் செய்யலாம். உதாரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் மட்டுமின்றி பேட்ஸ்மேனும் கூட. அப்படி இருந்தால் பந்து வீச்சில் பலம் வாய்ந்த அணியாக இந்தியா திகழும் என்று அஜய் ஜடேஜா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios