இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இஷான் கிஷானுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி முதலில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், முதல் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்திலும், 2ஆவது டி20 போட்டியில், இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று சமன் செய்தன. இதையடுத்து வெற்றியை நிர்ணயிக்கும் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் இல்லை, உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு: டாஸ் வென்ற இலங்கை பவுலிங்!

இதையடுத்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒரு நாள் போட்டி இன்று கவுகாத்தி மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா பந்து வீச்சு தேர்வு செய்தார். இலங்கை அணியைப் பொறுத்தவரையில் தில்சன் மதுஷங்கா இன்றைய போட்டியின் மூலம் ஒரு நாள் போட்டியில் அறிமுகமாகிறார். இந்திய அணியில் இஷான் கிஷான், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சகால், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

தோனி டெக்னிக்கை பின்பற்றிய இந்திய அணி: அஜய் ஜடேஜா பாராட்டு!

கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிராக நடந்த 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மாவுக்குப் பதிலாக அணியில் இடம் பெற்ற இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி 131 பந்துகளில் 210 ரன்கள் குவித்தார். இதில், 10 சிக்சர்கள், 24 பவுண்டரிகள் அடங்கும். இளம் வயதில் இரட்டை சதம் அடித்த என்ற பெருமையை இஷான் கிஷான் படைத்தார். ஆனால், இந்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்குப் பிறகு டி20 போட்டியில் விளையாடாத ரோகித் சர்மா!

இதே போன்று தான் அன்று கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் 300 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்தார். ஆனால், அடுத்த வருடத்திலேயே 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த டெஸ்ட் போட்டியில் அணியில் இடம் பெறவில்லை. தற்போது இதே நிலை தான் இஷான் கிஷானுக்கும் வந்துள்ளது. இஷான் கிஷான் அணியில் இடம் பெறாததற்கு முக்கிய காரணமாக கே எல் ராகுல் சொல்லப்படுகிறார். 

இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ்விற்கு வாய்ப்பில்லையா?

இந்தியா அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல், முகமது ஷமி, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சகால் மற்றும் முகமது சிராஜ்.

இலங்கை அணி: பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), அவிஷ்கா பெர்ணாண்டோ, தனஞ்ஜெயா டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷனகா(கேப்டன்), வணிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, துனித் வெல்லாலேஜ், கசுன் ரஞ்சித், தில்சன் மதுஷங்கா.

Scroll to load tweet…