இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா அபாரமான சாதனையை படைக்க வாய்ப்புள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமகாலத்தின் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்தாலும், கடந்த ஓராண்டாக அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
ரோஹித் சர்மா பொதுவாக இங்கிலாந்தில் அபாரமாக விளையாடுவார். ஏற்கனவே இங்கிலாந்தில் 7 சதங்களை அடித்துள்ளார் என்பதால், இந்த ஒருநாள் தொடரில் அவரிடமிருந்து சதம் எதிர்பார்க்கப்படுகிறது.
விவிஎஸ் லக்ஷ்மண் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, முகமது அசாருதீன் ஈடன் கார்டனில் சிறப்பாக ஆடுவதை போல, ரோஹித் சர்மா இங்கிலாந்தில் அருமையாக ஆடக்கூடியவர்.
இதையும் படிங்க - 11 வருஷத்துக்கு முன் சூர்யகுமார் யாதவ் குறித்து ரோஹித் போட்ட டுவீட்..! இப்ப செம வைரல்
அந்தவகையில், இங்கிலாந்துக்கு எதிராக இன்று முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில், இந்த ஒருநாள் தொடரில் ஒரு சதம் அடித்தால், சச்சின் டெண்டுல்கர் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோரின் சாதனைகளை ரோஹித் தகர்த்துவிடுவார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், சச்சின், சயீத் அன்வர், டிவில்லியர்ஸ், ரோஹித் சர்மா ஆகிய நால்வருமே முதலிடத்தை பகிர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க - ஐபிஎல்லில் ஆடும்போது ரெஸ்ட் தேவைப்படல.. இந்தியாவுக்காக ஆடுறதுனா மட்டும் வலிக்குது! சீனியர்களை விளாசிய கவாஸ்கர்
சச்சின் மற்றும் அன்வர் அமீரகத்திலும், டிவில்லியர்ஸ் இந்தியாவிலும், ரோஹித் இங்கிலாந்திலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தலா 7 சதங்களை அடித்துள்ளனர். எனவே ரோஹித் சர்மா இந்த தொடரில் இங்கிலாந்தில் இன்னுமொரு சதமடித்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டில் அதிக சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துவிடுவார்.
