ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியின் மூலமாக தனது 150ஆவது டி20 போட்டியில் விளையாடும் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் கோல்டன் டக்கில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி தற்போது இந்தூரில் நடந்து வருகிறது. இதில், கேப்டன் ரோகித் சர்மா தனது 150ஆவது டி20 போட்டியில் விளையாடுகிறார். இதன் மூலமாக அதிக டி20 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். அயர்லாந்து வீரர் பால் ஸ்டெர்லிங் 134 போட்டிகளில் விளையாடி 2ஆவது இடத்திலும், விராட் கோலி 116 போட்டிகளில் விளையாடி 3ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜத்ரன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக தொடங்கினர். ஆனால், அதற்குள்ளாக குர்பாஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குல்பதீன் நைப் அதிரடியை காட்ட ஆப்கானிஸ்தானின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. எனினும், ஜத்ரன் 8 ரன்களில் வெளியேற அடுத்து வந்த அஸ்மதுல்லா உமர்சாய் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஊர் ஊரா சுத்தி அடி மேல அடி வாங்கும் பாகிஸ்தான் – எப்போது தான் மீளுமோ? 2ஆவது டி20யிலும் தோல்வி!
சீரான இடைவெளியில் ஆப்கானிஸ்தான் விக்கெட்டுகளை இழந்தாலும் நைப் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். அவர் 35 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 57 ரன்கள் எடுத்திருந்த போது அக்ஷர் படேல் வர வைத்து அவரது கேட்சை பிடித்தார் ரோகித் சர்மா. பின்னர் வந்த நஜிபுல்லா ஜத்ரன் 23 ரன்களும், கரீம் ஜனத் 20 ரன்களும், முஜீப் உர் ரஹ்மான் 21 ரன்களும் எடுத்துக் கொடுக்க ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது.
Shubman Gill: ரன் அவுட் ஆனதுக்கு பழி தீர்த்தாரா ரோகித் சர்மா? சுப்மன் கில் நீக்க என்ன காரணம்?
பின்னர் கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஆப்கானிஸ்தான் அணியில் முதல் ஓவரை ஃபசல்ஹக் ஃபரூக்கில் வீசினார். முதல் பந்தை ஜெய்ஸ்வால் பவுண்டரிக்கு விரட்ட, 3 ஆவது பந்தில் ஜெய்ஸ்வாலிற்கு எல்பிடபிள்யூவிற்கு முறையிட்டனர். ஆனால், அவுட் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
அடுத்த பந்தில் ஜெய்ஸ்வால் சிங்கிள் தட்டினார். ஆனால், 5ஆவது பந்தை எதிர்கொண்ட ரோகித் சர்மா அதனை இறங்கி அடிக்க முயற்சித்து கிளீன் போல்டானார். இது அவருக்கு 150ஆவது டி20 போட்டி என்பதால், அரைசதமோ, சதமோ அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இந்த தொடரில் 2ஆவது முறையாக ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.
மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் 12ஆவது முறையாக ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் ஆட்டமிழந்துள்ளார். அதிக முறை டக் அவுட்டில் ஆட்டமிழந்த வீரர் என்ற மோசமான சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். 11 முறை டக் அவுட்டாகி 2ஆவது இடத்தில் சௌம்யா சர்கா மற்றும் ஜிம்பாப்வேயின் ரெஜிஸ் சகப்வா ஆகியோர் உள்ளனர். 10 முறை டக் அவுட்டானவர்களின் பட்டியலில் இலங்கையைச் சேர்ந்த தசுன் ஷனாகா, உமர் அக்மல், திலகரத்னே தில்ஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
