ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணியின் இளவரசர் என்று சொல்லப்படும் சுப்மன் கில் இடம் பெறவில்லை.
இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த டி20 தொடரின் மூலமாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அணிக்கு திரும்பினர். இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கடந்த 11 ஆம் தேதி நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது.
பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா மிட் ஆஃப் திசையில் பந்தை அடித்து விட்டு சிங்கிள் எடுப்பதற்கு ஓடி வந்துவிட்டார். ஆனால், எதிர் திசையில் நின்றிருந்த சுப்மன் கில் பந்தையே பார்த்துக் கொண்டு இருந்தார். கடைசி வரை ஓடவில்லை. இதன் காரணமாக ரோகித் சர்மா ரன் அவுட் செய்யப்பட்டார். ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
நான் விளையாடுறது மாதிரியே இருக்கு – ரிங்கு சிங்கின் பேட்டிங்கை புகழ்ந்து பேசிய யுவராஜ் சிங்!
இதனால், ஆத்திரமடைந்த ரோகித் சர்மா, கில்லை திட்டிக் கொண்டே நடையை கட்டினார். இந்த நிலையில் தான் தற்போது இந்தூரில் நடைபெற்று வரும் 2ஆவது டி20 போட்டியில் சுப்மன் கில்லை பிளேயிங் 11ல் இடம் பெறச் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அவருக்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெற்றுள்ளார். கேப்டன் ரோகித் சர்மா ரன் அவுட் ஆக காரணமாக இருந்ததால் தான் அவர் இந்தப் போட்டியில் இடம் பெறவில்லை என்றெல்லாம் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ள சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு!
ஆனால், ஜெய்ஸ்வாலை விட சும்பன் கில் 11 டி20 போட்டிகளில் விளையாடி 312 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்துள்ளார். மேலும், அதிகபட்சமாக 126 ரன்கள் எடுத்துள்ளார். ஜெய்ஸ்வால் 8 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், ஒரு அரைசதம் உள்பட 232 ரன்கள் எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 100 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
