சச்சினே சந்திக்க ஆசைப்படும் அந்த கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா? 2 கையுமே இல்லை, கழுத்தால் பேட் செய்யும் அமீர்

“ஒரு நாள் நான் அமீரைச் சந்தித்து அவர் பெயரைக் கொண்ட ஜெர்சியைப் பெறுவேன் என்று நம்புகிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

Indian Team Former Cricketer Sachin Tendulkar becomes fan of differently-abled player Amir Hussain Lone after watching his playing video rsk

ஜம்மு காஷ்மீரின் பிஜ்பெஹாராவில் உள்ள வகாமா கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் அமீர் ஹூசைன் லோனி. தற்போது 34 வயதாகும் அமீர் ஜம்மு காஷ்மீரின் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கிறார். இவரது அசாத்திய திறமை என்னவென்றால், இரண்டு கையும் இல்லை, ஆனாலும் கிரிக்கெட் மீதான ஆர்வம் அவரை கிரிக்கெட் விளையாட தூண்டியது. எப்படி என்றால், தனது கழுத்தை பயன்படுத்தி கிரிக்கெட் பேட்டை பிடித்து அதனைக் கொண்டு பேட்டிங் செய்து வருகிறார்.

ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – அகமதாபாத்தில் நடந்த காத்தாடி திருவிழா!

கடந்த 2013 ஆம் ஆண்டில் ஆசிரியர் ஒருவர் இவரது திறமையை அறிந்து கொண்டு அவரை பாரா கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதன் பிறகு அவர் தொழில்முறை கிரிக்கெட்டராக மாறியுள்ளார். பந்து வீசுவதற்கு கால்களை பயன்படுத்துகிறார். ஷாட்டுகளை அடிப்பதற்கு கழுத்துக்கும், தோளுக்கும் இடையில் வைத்துக் கொண்டு விளையாடுகிறார். தான், 8 வயதாக இருக்கும் போது தனது தந்தையில் ஆலையில் இரண்டு கைகளையும் இழந்திருக்கிறார்.

Dhruv Jurel: கிரிக்கெட் கிட் வாங்க அம்மா தங்க சங்கிலியை வித்து கொடுத்தாங்க – துருவ் ஜூரெல்!

 

அமீர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அமீர் அந்த வீடியோவில் சச்சின் டெண்டுகரின் பெயர் மற்றும் நம்பர் 10 கொண்ட ஜெர்சி அணிந்து விளையாடுகிறார். இந்த நிலையில், தான் இந்த வீடியோ தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர், அமீரை பாராட்டியுள்ளார். இது குறித்து சச்சின் கூறியிருப்பதாவது: மேலும் அமீர் முடியாததை சாத்தியமாக்கியுள்ளார்.

இதைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ந்தேன்! விளையாட்டின் மீது அவருக்கு எவ்வளவு அன்பும் அர்ப்பணிப்பும் இருக்கிறது என்பதை காட்டுகிறது. ஒரு நாள் அவரைச் சந்தித்து அவர் பெயர் கொண்ட ஜெர்சியைப் பெறுவேன் என்று நம்புகிறேன். விளையாட்டில் ஆர்வமுள்ள மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவித்ததற்காக வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

ரிங்கு சிங்கின் நண்பருக்கு இந்திய அணியில் இடம், தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சஞ்சு சாம்சன்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios