ரிங்கு சிங்கின் நண்பருக்கு இந்திய அணியில் இடம், தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சஞ்சு சாம்சன்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் விக்கெட் கீப்பராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள துருவ் ஜூரெல் இடம் பெற்றுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில், விக்கெட் கீப்பராக துருவ் ஜூரெல் என்ற இளம் வீரர் இடம் பெற்றுள்ளார். மாற்று விக்கெட் கீப்பராக அணியில் இடம் பெற்றுள்ள அவருக்கு பிளேயிங் 11ல் இடம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
எனது மகன் சமித்திற்கு நான் பயிற்சி அளிக்கவில்லை – ராகுல் டிராவிட்!
உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் துருவ் ஜூரெல். இவர் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக திகழ்கிறார். ரிங்கு சிங்கின் நண்பரும் கூட. நடந்து முடிந்த 2023 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இம்பேக்ட் பிளேயராக இடம் பெற்று விளையாடினார். இந்த நிலையில் தான் தற்போது இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். ஐபிஎல் தொடர் மட்டுமின்றி, விஜய் ஹசாரே, ரஞ்சி டிராபி என்று உள்ளூர் போட்டிகளில் சிறப்பான் பங்களிப்பை அளித்த நிலையில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக இந்திய அணிக்காக விளையாடிய இஷான் கிஷன் மன உளைச்சல் காரணமாக ஓய்வு வேண்டும் என்று பிசிசிஐயிடம் கேட்டு, ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளார். மேலும், கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக அணியில் இடம் பெற்றுள்ள நிலையில், அவருக்கு மாற்று விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத்தும், பரத்திற்கு மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜூரெலும் அணியில் இடம் பெற்றிருக்கிறார்.
ஆனால், அவருக்கு பிளேயிங் 11ல் இடம் கிடைப்பது என்பது சந்தேகம் தான். ஏனென்றால், கேஎல் ராகுலுக்கு காயம் போட்டியில் பங்கேற்கவில்லை என்றால், அவருக்கு பதிலாக கேஎஸ் பரத் தான் அணியில் இடம் பெறுவார். ஆதலால் ஜூரெல் அணியில் இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள சஞ்சு சாம்சனுக்கு இதுவரையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் கிடைக்கவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் சஞ்சு சாம்சனுக்கு வருடத்திற்கு ஒரு சில போட்டிகளில் மட்டுமே இடம் அளிக்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்று விளையாடிய சாம்சன், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இடம் பெற்றுள்ளார். ஆனால், அவர் முதல் போட்டிக்கான பிளேயிங் 11ல் இடம் பெறவில்லை. நாளை 2ஆவது டி20 போட்டி நடக்க இருக்கிறது. இதில் இடம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.