எனது மகன் சமித்திற்கு நான் பயிற்சி அளிக்கவில்லை – ராகுல் டிராவிட்!
தனது மகன் சமித்திற்கு பயிற்சியாளராக நான் என்ன செய்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. அவருக்கு நான் பயிற்சி அளிப்பதில்லை என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ஜூனியர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தனது மகன் சமித்துக்கு பயிற்சியளிப்பது குறித்த தனது எண்ணங்களை சமீபத்தில் பகிர்ந்து கொண்டார். கூச் பெஹர் டிராபியின் இறுதிப் போட்டிக்கு கர்நாடகாவை அழைத்துச் செல்வதில் 18 வயது நிரம்பிய டிராவிட்டின் மகன் சமித் முக்கியப் பங்கு வகிக்கிறார்.
ஆல்ரவுண்டர் 7 போட்டிகளில் விளையாடி 37.78 சராசரியுடன் 3 அரைசதங்கள் உள்பட 370 ரன்கள் எடுத்தார். மேலும், பந்து வீச்சில் வலது கை வேகப்பந்து வீச்சாளரான சமித் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பெற்றோரும் பயிற்சியாளரும் ஒன்றாக இருப்பது கடினம் என்பதால் தனது மகனுக்கு பயிற்சி அளிக்கவில்லை என்று டிராவிட் கூறினார்.
இது குறித்து ராகுல் டிராவிட் கூறியிருப்பதாவது: பெற்றோர் மற்றும் பயிற்சியாளராக இருப்பது கடினம் என்பதால் எனது மகன் சமித்திற்கு நான் பயிற்சி அளிக்கவில்லை. நான் தந்தையாகவே இருப்பதில் தான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், ஒரு பயிற்சியாளராக நான் என்ன செய்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இது தவிர இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன்களின் எழுச்சி குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். அதில், யஷஸ்வி ஜெய்ஷ்வால், ரிங்கு சிங், திலக் வர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால், அவர்க இடது கை பேட்ஸ்மேன்களாக இருப்பது மட்டுமின்றி அணியில் ஒரு அங்கமாக தொடர்ந்து நீடிக்க தங்களது திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஜிம்பாப்வேயை வச்சு செஞ்ச வணிந்து ஹசரங்கா – அசால்டா 7 விக்கெட் எடுத்து சாதனை!