ஊர் ஊரா சுத்தி அடி மேல அடி வாங்கும் பாகிஸ்தான் – எப்போது தான் மீளுமோ? 2ஆவது டி20யிலும் தோல்வி!

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த 2ஆவது டி20 போட்டியில் பாகிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

New Zealand beat Pakistan by 21 Runs in 2nd T20I match at Hamilton rsk

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி இன்று நடந்தது. இதில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது.

Shubman Gill: ரன் அவுட் ஆனதுக்கு பழி தீர்த்தாரா ரோகித் சர்மா? சுப்மன் கில் நீக்க என்ன காரணம்?

ஃபின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே தொடக்க வீரர்களாக களமிறங்கி முதல் விக்கெட்டிற்கு 59 ரன்கள் சேர்த்தனர். கான்வே 20 ரன்களில் ஆட்டமிழக்கவே, கேன் வில்லியம்சன் 26 ரன்களில் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஃபின் ஆலன் 74 ரன்கள் சேர்க்கவே, நியூசிலாந்து 194 ரன்கள் குவித்தது.

பின்னர், கடின இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு தொடக்க வீரர்களான சைப் அயூப் 1 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 7 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். அடுத்து வந்த பாபர் அசாம் மற்றும் ஃபகர் ஜமான் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது. 3ஆவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 87 ரன்கள் குவித்தது. ஃபகர் ஜமான் 50 ரன்கள் சேர்த்துக் கொடுத்து ஆட்டமிழந்தார்.

India vs Afghanistan: கில், திலக் வர்மா நீக்கம்; கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு – இந்தியா பவுலிங்!

பாபர் அசாம், 66 ரன்கள் சேர்த்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். அவ்வளவு தான், அடுத்து வந்த வீரர்கள் யாரும் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. கடைசியில் பாகிஸ்தான் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் குவித்தது. இதன் மூலமாக பாகிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் நியூசிலாந்து அணியில் ஆடம் மில்னே 4 விக்கெட்டுகளும், டிம் சவுதி, பென் சியர்ஸ், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக நியூசிலாந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

நான் விளையாடுறது மாதிரியே இருக்கு – ரிங்கு சிங்கின் பேட்டிங்கை புகழ்ந்து பேசிய யுவராஜ் சிங்!

பாகிஸ்தான் கடைசியாக விளையாடிய 12 சர்வதேச போட்டிகளில் 10 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பை தொடரிலிருந்து தொடர்ந்து பாகிஸ்தான் அடி மேல அடி வாங்கி வருகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு சென்ற பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி 3 போட்டியிலும் தோல்வி அடைந்து ஒயிட் வாஷான நிலையில் திரும்ப வந்தது. தற்போது நியூசிலாந்திலும் தொடர்ந்து 2 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. மூன்றாவது டி20 போட்டி வரும் 17 ஆம் தேதி டுனெடினில் நடக்க இருக்கிறது.

அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ள சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios