Asianet News TamilAsianet News Tamil

IND vs AUS: ரோஹித் சர்மா அதிரடி அரைசதம்.. இந்திய அணிக்கு நல்ல தொடக்கம்

முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை 177 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் அடித்துள்ளது.
 

rohit sharma fifty gives good start to team india in first test against australia
Author
First Published Feb 9, 2023, 5:42 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்டதொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் டாட் மர்ஃபி என்ற ஸ்பின்னர் அறிமுகமானார். 

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், மேட் ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நேதன் லயன், டாட் மர்ஃபி, ஸ்காட் போலந்த்.

IND vs AUS: டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம்.. முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்த சூர்யகுமார் யாதவ்

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரையுமே தலா ஒரு ரன்னுக்கு முறையே சிராஜ் மற்றும் ஷமி வீழ்த்தினர். 2 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணிக்கு, அதன்பின்னர் மார்னஸ் லபுஷேனும் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொண்டு சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 3வது விக்கெட்டுக்கு 82 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடி 49 ரன்கள் அடித்த லபுஷேனை வீழ்த்திய ஜடேஜா, அதற்கடுத்த பந்திலேயே மேட் ரென்ஷாவையும் வீழ்த்தினார்.

மதிய உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் அடித்திருந்தது ஆஸ்திரேலிய அணி. உணவு இடைவேளைக்கு பின் ஜடேஜா மளமளவென ஆஸ்திரேலிய வீரர்களை வீழ்த்தினார். லபுஷேன்(49), ரென்ஷாவை(1) தொடர்ந்து ஸ்மித்தையும் 37 ரன்களுக்கு க்ளீன் போல்டாக்கி அனுப்பினார் ஜடேஜா. அதன்பின்னர் அதிரடியாக ஆடி 33 பந்தில் 36 ரன்கள் அடித்த அலெக்ஸ் கேரியை வீழ்த்திய அஷ்வின், கம்மின்ஸையும் 6 ரன்களுக்கு வீழ்த்தினார். ஹேண்ட்ஸ்கோம்ப்பை 31 ரன்களுக்கு வீழ்த்திய ஜடேஜா, டாட் மர்ஃபியை டக் அவுட்டாக்கி, 5 விக்கெட் வீழ்த்தினார். கடைசி விக்கெட்டை அஷ்வின் வீழ்த்த, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

முழங்கால் அறுவை சிகிச்சையால் கடந்த பல மாதங்களாக ஆடாத ஜடேஜா, தனது கம்பேக் டெஸ்ட்டில் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார்.

முழு விவசாயியாகவே மாறிய தோனி.. தன் விளைநிலத்தை டிராக்டரில் தானே உழுத தோனி..! வைரல் வீடியோ

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 76 ரன்களை சேர்த்தனர். முதல் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரில் ராகுல் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் அடித்துள்ளது. ரோஹித் சர்மா 56 ரன்களுடனும், அவருடன் அஷ்வினும் களத்தில் உள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios