இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நாளை நடக்க உள்ள போட்டியில் சுப்மன் கில் விளையாடுவது 99 சதவிகிதம் உறுதி என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
டெங்கு பாதிப்பு காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியிலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2 ஆவது போட்டியிலும் சுப்மன் கில் இடம் பெறவில்லை. இது சுப்மன் கில்லின் முதல் உலகக் கோப்பை. சுப்மன் கில்லிற்குப் பதிலாக இஷான் கிஷான் இடம் பெற்று விளையாடினார். அவர் முதல் போட்டியில் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்த நிலையில், 2ஆவது போட்டியில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி நாளை 14 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்க உள்ள நிலையில், சுப்மன் கில் நேற்று இந்திய அணியுடன் அகமதாபாத் புறப்பட்டு வந்து பயிற்சி மேற்கொண்டார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக அவர் பயிற்சி மேற்கொண்டார். கில் இன்றும் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்கள் வைரலானது.
LA 2028: 128 ஆண்டுகளுக்குப் பிறகு 2028 ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்த நிலையில் தான் செய்தியாளர்களைச் சந்தித்த ரோகித் சர்மா கூறியிருப்பதாவத்: சுப்மன் கில் தற்போது உடல் நலம் முன்னேறியுள்ளார். அவர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஆதலால், நாளை நடக்க உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கில் இடம் பெறுவது 99 சதவிகிதம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
India vs Pakistan உலகக் கோப்பை போட்டிக்காக அகமதாபாத்தில் 11000க்கும் அதிகமான போலீசார் குவிப்பு!

