IND vs ENG: வரலாற்றில் ஒரே ஆண்டில் 100 பவுண்டரி, 50 சிக்ஸர்கள்: இப்படியொரு சாதனையா? வியக்க வைத்த ரோகித் சர்மா!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒரே ஆண்டில் 100 பவுண்டரி, 50 சிக்ஸர்கள் விளாசி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Rohit Sharma becomes the first player to hit 100 fours and 50 sixes in a Calendar year in ODI history rsk

இந்தியா நடத்தும் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இந்திய அணி மட்டுமே விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா 2ஆவது இடத்திலும், நியூசிலாந்து 3ஆவது இடத்திலும், ஆஸ்திரேலியா 4ஆவது இடத்திலும் உள்ளன.

தட்டி தூக்கிய ஃபசல்ஹக் பாரூக்கி – இலங்கை 241 ரன்னுக்கு ஆல் அவுட்!

கடைசி 2 இடங்களில் முறையே வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் உள்ளன. இந்த நிலையில், ரோகித் சர்மா வரலாற்றில் முதல் முறையாக ஒரே ஆண்டில் 100 பவுண்டரி மற்றும் 50 சிக்ஸர்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதயை ரோகித் சர்மா படைத்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 29ஆவது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் குவித்தது. ஒரு கேப்டனாக தனது 100ஆவது போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா 101 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும்3 சிக்ஸர்கள் உள்பட 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

Afghanistan vs Sri Lanka: ரஷீத் கானின் 100ஆவது ஒரு நாள் போட்டி – டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங்!

இந்தப் போட்டியில் 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் கிறிஸ் கெயிலின் 56 சிக்ஸர்கள் சாதனையை சமன் செய்துள்ளார். இந்தப் போட்டிக்கு முன்னதாக ஒரு நாள் போட்டிகளில் 53 சிக்ஸர்கள் அடித்திருந்த ரோகித் சர்மா, இந்தப் போட்டியின் மூலமாக 56 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதற்கு முன்னதாக 2015ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபிடிவிலியர்ஸ் 58 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி 10 பவுண்டரிகள் மூலமாக 100 பவுண்டரிகள் விளாசியுள்ளார். இப்படி ஒரே ஆண்டில், 100 பவுண்டரிகள் மற்றும் 50 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் ஹர்திக் பாண்டியா – அரையிறுதியில் களமிறக்க பிசிசிஐ முடிவு?

ஒரு கேப்டனாக விளையாடிய 100 போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்றுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஒரே கேப்டன் ரோகித் சர்மா மட்டுமே.

5ஆவது இந்திய வீரராக 18000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக 20ஆவது வீரராக 18000 ரன்களை கடந்துள்ளார்.

இந்த ஆண்டில் 1000 ரன்களை கடந்த 6ஆவது இந்திய கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் (1997), முகமது அசாரூதீன் (1998), சவுரவ் கங்குலி (2000, 2002), எம்.எஸ்.தோனி (2008, 2009), விராட் கோலி (2017, 2018, 2019) ஆகியோர் ஒரே ஆண்டில் 1000 ரன்களை கடந்துள்ளனர். 

IND vs ENG: உலகக் கோப்பையில் 59ஆவது போட்டியில் வெற்றி பெற்ற டீம் இந்தியா – ஆஸ்திரேலியா தான் நம்பர் 1!

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 12 அரைசதங்கள் அடித்து விராட் கோலி, ஷாகிப் அல் ஹசன், குமார் சங்கக்காரா ஆகியோருடன் இணைந்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் மட்டுமே 50 அரைசதங்களுக்கு மேல் அடித்துள்ளார்.

இதுவரையில் விளையாடிய 23 உலகக் கோப்பை போட்டிகளில் ரோகித் சர்மா 7 முறை ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார். ஆனால், சச்சின் டெண்டுல்கர் 9 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். இதுவரையில் இந்த உலகக் கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா 398 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய வீரராக அதிக ரன்கள் குவித்த வீரர்களில் முதலிடத்தில் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக 4ஆவது இடத்தில் உள்ளார். இந்த உலகக் கோப்பை போட்டிகளில் 20 சிக்ஸர்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios