ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 30ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்கள் குவித்தது.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 30ஆவது லீக் போட்டி புனே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி இலங்கை அணியில் பதும் நிசாங்கா மற்றும் திமுத் கருணாரத்னே இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் கருணாரத்னே 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் குசால் மெண்டிஸ், நிசாங்கா உடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினார். தொடக்கம் முதலே நிதானமாக விளையாடிய நிசாங்கா 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து சதீரா சமரவிக்ரமாக களமிறங்கி பொறுமையாக விளையாடினார்.

Afghanistan vs Sri Lanka: ரஷீத் கானின் 100ஆவது ஒரு நாள் போட்டி – டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங்!

இதற்கிடையில் மெண்டிஸ் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். சமரவிக்ரமா 36 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சரித் அசலங்கா 22 ரன்களில் நடையை கட்டினார். அப்போது இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு வந்த துஷாந்தா சமீரா 1 ரன்களில் ஆட்டமிழக்க, மஹீஷ் தீக்‌ஷனா 29 ரன்கள் சேர்த்து நடையை கட்டவே, கடைசி வரை நிதானமாக ரன்கள் சேர்த்த ஏஞ்சலோ மேத்யூஸ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஜீதா 5 ரன்களில் வெளியேறினார். இறுதியாக இலங்கை 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் குவித்தது.

தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் ஹர்திக் பாண்டியா – அரையிறுதியில் களமிறக்க பிசிசிஐ முடிவு?

பவுலிங்கைப் பொறுத்த வரையில் தனது 100ஆவது ஒரு நாள் போட்டியில் விளையாடிய ரஷீத் கான் 10 ஓவர்கள் வீசி 50 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டும், ஃபசல்ஹக் ஃபாரூக்கி 4 விக்கெட்டும், அஸ்மதுல்லா உமர்சாய் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

 ஆப்கானிஸ்தான்:

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரன், ஹஷ்மதுல்லா ஷாகிடி (கேப்டன்), அஸ்மதுல்லா உமர்சாய், இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபாரூக்கி.

இலங்கை:

பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்னே, குசால் மெண்டிஸ் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனன்ஜெயா டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ், மஹீஷ் தீக்‌ஷனா, கசுன் ரஜீதா, துஷ்மந்தா சமீரா, தில்ஷன் மதுஷங்கா

IND vs ENG: உலகக் கோப்பையில் 59ஆவது போட்டியில் வெற்றி பெற்ற டீம் இந்தியா – ஆஸ்திரேலியா தான் நம்பர் 1!