தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் ஹர்திக் பாண்டியா – அரையிறுதியில் களமிறக்க பிசிசிஐ முடிவு?
கணுக்கால் காயத்திலிருந்து மீண்டு வரும் ஹர்திக் பாண்டியா அரையிறுதிப் போட்டியில் விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது தனது முதல் ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்டியாவிற்கு இடது கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மைதானத்திலிருந்து வெளியேறிய அவருக்குப் பதிலாக எஞ்சிய 3 பந்துகளை விராட் கோலி வீசினார். அப்போது ஹர்திக் பாண்டியாவிற்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், எந்த பாதிப்பும் இல்லை என்றும் தொடர்ந்து அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அதன் பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு ஹர்திக் பாண்டியா மாற்றப்பட்டார். அங்குள்ள மருத்துவர்கள் ஹர்திக் பாண்டியாவை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியிலிருந்து விலகினார்.
மேலும் இலங்கைக்கு எதிரான போட்டியிலும் விளையாடமாட்டார் என்றும், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இடம் பெறுவார் என்றும் ஏற்கனவே தகவல் வெளியானது. ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில் சூர்யகுமார் யாதவ் மற்றும் முகமது ஷமி இருவரும் அணியில் இடம் பெற்று சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
தொடர்ந்து அடிமேல் அடி வாங்கும் நடப்பு சாம்பியன் – 3ஆவது முறையாக 200 ரன்களுக்குள் ஆல் அவுட்!
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா நேற்று முதல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங் பயிற்சியை தொடங்கியுள்ளார். இதன் காரணமாக அவர் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவித்து வரும் நிலையில், ஹர்திக் பாண்டியாவை இப்போதைக்கு களமிறக்க பிசிசிஐ தயார் நிலையில் இல்லை. ஆதலால், அவரை அரையிறுதிப் போட்டிக்கு களமிறக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.