Asianet News TamilAsianet News Tamil

ஷமி, உமேஷ் யாதவ், சிராஜிற்கு டியூப் பந்து அனுப்பி வைப்பு; நேரம் கிடைக்கும் போது பயிற்சி செய்ய அறிவுறுத்தல்!

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க உள்ள நிலையில் எப்போதெல்லாம் நெரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் டியூக் வகை பந்து கொண்டு பயிற்சி செய்ய வேஎண்டும் என்று வேகப்பந்து வீச்சாளர்களுக்கு டியூக் பந்து கொடுக்கப்பட்டுள்ளது.

Rohit Sharma Advised to Mohammed Shami, Siraj  for Dukes ball Practice to WTC Final
Author
First Published Mar 15, 2023, 12:08 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை இந்தியா 2-1 என்று கைப்பற்றியது. இதே போன்று நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா முதல் அணியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. தற்போது 2ஆவது அணியாக இந்தியா தகுதி பெற்றதைத் தொடர்ந்து வரும் ஜூன் 7 ஆம் தேதி ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது.

எப்படியும் 6 டீம் வெளிய போயிடும் - லாஸ்ட்டுல ஃபர்ஸ்ட் யாரு வர்றாங்களோ அவங்க இங்கிலாந்துக்கு ஃபர்ஸ்டா போவாங்க!

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் முடிந்த நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்க இருக்கிறது. வரும் 17 ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதே போன்று காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயரும் பங்கேற்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

No Look Six:சொட்ட சொட்ட வியர்வை சிந்தி பயிற்சி செய்யும் தோனி: சிக்சர் விளாசியும் பந்தை பார்க்காத வீடியோ வைரல்!

இரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி வரும் 22 ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதையடுத்து ஒரு வார இடைவெளியில் வரும் 31 ஆம் தேதி 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடங்கி வரும் மே 28 ஆம் தேதி வரையில் நடகிறது. இந்த ஐபிஎல் சீசன் முடிந்த உடனே இந்திய அணி உலக டெஸ்ட் சாபியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இங்கிலாந்து புறப்படுகிறது. 

மகிழ்ச்சியின் உச்சகட்டம், நார்வே நாட்டு டான்ஸ் குழுவோடு சேர்ந்து டான்ஸ் ஆடிய விராட் கோலி!

இந்த நிலையில், இது குறித்து ரோகித் சர்மா கூறியிருப்பதாவது: இது எங்களுக்கு சற்று கடினமான ஒன்று தான். தொடர்ந்து ஓய்வில்லாமல் விளையாடி வரும் அனைத்து வீரர்களுடனும் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்துவோம். அவர்களின் பணிச்சுமைகளை பிசிசிஐ கண்காணித்துக்கொண்டே இருக்கும். மே 21ம் தேதிக்கு பின் 6 அணிகள் பிளே ஆஃப் சுற்றில் இடம்பெறாமல் வெளியேறிவிடும். எனவே அப்போது எந்தெந்த வீரர்கள் ஃப்ரீயாக இருக்கிறார்களோ, அவர்கள் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

ஒரு ஓவரில் 4 சிக்சர்கள் அடிக்கிறேன்; மனசாட்சி சொல்லியிருச்சு - ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக்!

இந்திய அணியின் முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் உள்பட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு டியூக் வகை பந்துகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதனைக் கொண்டு அவர்கள் எபோதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் பயிற்சி செய்ய வேண்டும். இவ்வளவு ஏன், ஐபிஎல் போட்டியின் போது கூட அவர்கள் டியூக் பந்து கொண்டு பயிற்சி செய்யலாம். ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் மட்டும் முன்கூட்டியே இங்கிலாந்து செல்ல முடியாது என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios