Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பையில் பும்ரா ஆடாததுலாம் இந்தியாவுக்கு பெரிய பிரச்னையே இல்ல..! கெத்தான காரணம் கூறும் வாரிசு வீரர்

டி20 உலக கோப்பையில் ஜஸ்ப்ரித் பும்ரா ஆடாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பு இல்லை என்று முன்னாள் வீரர் ரோஹன் கவாஸ்கர் கூறியுள்ளார்.
 

rohan gavaskar feels jasprit bumrah absence is not a loss for team india in t20 world cup
Author
First Published Oct 3, 2022, 10:07 PM IST

டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. இந்த உலக கோப்பையில் காயம் காரணமாக ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆடவில்லை. ஆனால் அவரை ஒத்த இடது கை ஸ்பின் ஆல்ரவுண்டரான அக்ஸர் படேல், அபாரமாக விளையாடி நம்பிக்கையளித்ததால் ஜடேஜாவின் இழப்பை பற்றி இந்தியா பெரிதாக யோசிக்கவில்லை.

ஆனால் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக டி20 உலக கோப்பையில் ஆடவில்லை. பும்ரா காயத்தால் டி20 உலக கோப்பையில் ஆடமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையிலிருந்து ஜஸ்ப்ரித் பும்ரா விலகல்.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

புதிய பந்தில் பவர்ப்ளேயில், டெத் ஓவர்கள் மற்றும் மிடில் ஓவர்கள் என ஆட்டத்தின் அனைத்து சூழல்களிலும் அபாரமாக பந்துவீசக்கூடிய சிறந்த பவுலர் பும்ரா. அதிலும் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியமான அஸ்திரம் அவர். ஆனால் காயத்தால் அவர் விலகியது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பாக பார்க்கப்படுகிறது.

ஆனால் அவரது இழப்பு இந்திய அணிக்கு பெரிய இழப்போ பாதிப்போ இல்லை என்று முன்னாள் வீரர் ரோஹன் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய ரோஹன் கவாஸ்கர், பும்ராவின் இடத்தை இந்திய அணியில் யாராலும் நிரப்ப முடியாது. பும்ராவை ஆடும் லெவனில் பெற்றிருப்பது எந்தவிதமான அணியின் பவுலிங் யூனிட்டிற்கும் வலுசேர்ப்பதுதான். அவர் இருந்தால் அந்த பவுலிங் யூனிட்டின் வலிமையே வேற லெவல். 

இதையும் படிங்க - IND vs SA: 3வது டி20 போட்டியில் பெரிய தலைகளுக்கு ஓய்வு..! உத்தேச இந்திய அணி

பும்ரா இருப்பதன் சாதகத்தை இந்தியா இழக்கும். ஆனால் அதேவேளையில், அவர் இல்லாதது இழப்பா என்றால், கண்டிப்பாக இல்லை. ஏனெனில் கடந்த ஒன்றரை ஆண்டில் அவர் பெரிதாக டி20 கிரிக்கெட்டில் ஆடவில்லை. அவர் இல்லாத அணியில், அதற்கேற்ப திட்டம் தீட்ட வேண்டும். புவனேஷ்வர் குமாரால் என்ன செய்யமுடியும் என்று நம் அனைவருக்கும் தெரியும். இளம் வீரர்களை அழுத்தமான சூழல்களில் எப்படி பயன்படுத்த முடியும் என்பதை பற்றி யோசிக்க வேண்டும். அதுதான் எதிர்காலத்திற்கும் நல்லது என்று ரோஹன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios