டி20 உலக கோப்பையிலிருந்து ஜஸ்ப்ரித் பும்ரா விலகல்.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
டி20 உலக கோப்பையில் ஜஸ்ப்ரித் பும்ரா ஆடமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலக கோப்பை அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது.
டி20 உலக கோப்பையில் ஆல்ரவுண்டர் ஜடேஜா காயத்தால் ஆடவில்லை. இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி ஃபாஸ்ட் பவுலரான ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தால் ஆடமாட்டார் என்பது ஏற்கனவே தெரிந்ததுதான்.
முதுகுப்பகுதியில் காயம் காரணமாக தென்னாப்பிரிக்க டி20 தொடரிலிருந்து விலகி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார் பும்ரா. ஆனால் டி20 உலக கோப்பையிலிருந்து அவர் விலகுவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது.
அதனால் ரசிகர்களுக்கு ஓரத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. இந்நிலையில், ஜஸ்ப்ரித் பும்ராவின் காயம் குணமடைய கால அவகாசம் ஆகும் என்பதால், அவர் டி20 உலக கோப்பையில் ஆடமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
முன்னணி ஃபாஸ்ட் பவுலரான பும்ரா ஆடாதது இந்திய அணிக்கு பேரிழப்பு. அவருக்கு மாற்றுவீரர் இன்னும் ஒன்றிரண்டு தினங்களில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முகமது ஷமி, தீபக் சாஹர், முகமது சிராஜ் ஆகிய மூவரில் ஒருவர் மாற்று வீரராக அறிவிக்கப்படுவார்.