Asianet News TamilAsianet News Tamil

பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி நியமனம்.. புதிய நிர்வாகிகளின் முழு பட்டியல்

பிசிசிஐ புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டார். பிசிசிஐ பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளின் விவரங்களை பார்ப்போம்.
 

roger binny appointed as president of bcci and here is the list of new administrators
Author
First Published Oct 18, 2022, 2:03 PM IST

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 91வது பொதுக்குழு இன்று மும்பையில் நடந்தது. இந்த பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

2019ம் ஆண்டிலிருந்து பிசிசிஐ தலைவராக இருந்துவந்த சௌரவ் கங்குலியின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, அவர் பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலகினார். பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷாவிற்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படும் நிலையில், தலைவராக இருந்த கங்குலிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படாதது, பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று பெரும் சர்ச்சை வெடித்தது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: பும்ராவுக்கு சரியான மாற்று வீரரா முகமது ஷமி..? சச்சின் டெண்டுல்கர் அலசல்

ஆனால், எந்த பதவியாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலகித்தானே ஆகவேண்டும் என்ற எதார்த்தத்தை ஏற்கனவே கூறியிருந்த நிலையில், பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து அவர் விலகினார்.

ஏற்கனவே தெரிந்தபடியே, இந்திய அணியின் முன்னாள் வீரரும், 1983 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தவருமான ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  ஜெய் ஷா மீண்டும் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிசிசிஐ புதிய நிர்வாகிகள் விவரம்:

பிசிசிஐ தலைவர் - ரோஜர் பின்னி
துணை தலைவர் - ராஜீவ் சுக்லா
செயலாளர் - ஜெய் ஷா
பொருளாளர் - ஆஷிஷ் ஷெலார்
இணை செயலாளர் - தேவஜித் சைகியா
கவுன்சிலர் - கைருல் ஜமால் மஜும்தர்

பிசிசிஐ பொருளாளராக இருந்த அருண் துமால், இப்போது ஐபிஎல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க - ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் புதிய கேப்டன் பாட் கம்மின்ஸ்..! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐபிஎல் நிர்வாகக்குழு - அருண் துமால், அவிஷேக் டால்மியா.
 

Follow Us:
Download App:
  • android
  • ios