PAKCH vs INDCH: பாகிஸ்தான் வீரருக்கு உதவி செய்த ராபின் உத்தப்பா – எக்ஸ் பக்கத்தில் குவியும் வாழ்த்து!

உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியின் வீரர் மிஷ்பா உல் ஹக் காலில் காயம் அடைந்த நிலையில் அவருக்கு இந்தியா சாம்பியன்ஸ் வீரர் ராபின் உத்தப்பா உதவி செய்துள்ளார்.

Robin Uthappa Helps injured Misbah-ul-Haq during PAKCH vs INDCH in WCL 2024 final at Birmingham rsk

இங்கிலாந்தில் உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் 2024 தொடரின் முதல் சீசன் கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது. இதில், இந்தியா சாம்பியன்ஸ், ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ், பாகிஸ்தான் சாம்பியன்ஸ், இங்கிலாந்து சாம்பியன்ஸ், தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிகள் இடம் பெற்று விளையாடின. அதாவது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் சாம்பியன்ஸ் தொடர். இந்த தொடருக்கான இந்தியா சாம்பியன்ஸ் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அன்ஷுமான் கெய்க்வாட் – ரூ.1 கோடி நிதியுதவி அளித்த ஜெய் ஷா!

இதில், இர்பான் பதான், யூசுப் பதான், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, ஹர்பஜன் சிங், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு ஆகியோர் இந்தியா சாம்பியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தனர். இந்த தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் சாம்பியன்ஸ் மற்றும் இந்தியா சாம்பியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியானது, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக சோயிப் மாலிக் 41 ரன்கள் எடுத்தார்.

இந்தப் போட்டியில் 17ஆவது ஓவரின் போது மிஸ்பா உல் ஹக் காலில் காயம் அடைந்துள்ளார். இதையடுத்து ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். அப்போது நடக்க முடியாமல் தவித்த அவருக்கு இந்தியா சாம்பியன்ஸ் வீரர் ராபின் உத்தப்பா அவருக்கு உதவி செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ராபின் உத்தப்பாவிற்கு வாழ்த்து குவிந்து வருகிறது.

TNPL 2024, LKK vs NRK: அதிரடியாக விளையாடிய சச்சின் – லைகா கோவை கிங்ஸ் அணிக்கு கிடைத்த 3ஆவது வெற்றி!

இந்தப் போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் அனுரீத் சிங் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். வினய் குமார், பவன் நெகி மற்றும் இர்பான் பதான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர், எளிய இலக்கை துரத்திய இந்தியா சாம்பியன்ஸ் அணியில் ராபின் உத்தப்பா மற்றும் அம்பத்தி ராயுடு இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இதில், உத்தப்பா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 4 ரன்களில் நடையை கட்டினார். அதிரடியாக விளையாடிய ராயுடு 30 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குர்கீரத் சிங் மன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். யூசுப் பதான் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

2 தோல்விகளுக்கு பிறகு கிடைத்த முதல் வெற்றி – பாலசந்தர் அனிருத் அதிரடியால் திருப்பூர் தமிழன்ஸ் வெற்றி!

கடைசியில் யுவராஜ் சிங் மற்றும் இர்பான் பதான் இருவரும் இணைந்து இந்தியா சாம்பியன்ஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் இந்தியா சாம்பியன்ஸ் 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபி வென்று சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணியானது 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் ராபின் உத்தப்பா, யுவராஜ் சிங், இர்பான் பதான், ஹர்பஜன் சிங் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

17 ஆண்டுகளுக்கு பிறகு பைனலில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா சாம்பியன்ஸ் – யுவராஜ் சிங் ஹேப்பி அண்ணாச்சி!

இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபி கைப்பற்றியதன் மூலமாக 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா சாம்பியன்ஸ் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் அரைசதம் அடித்த அம்பத்தி ராயுடு ஆட்டநாயகன் விருது வென்றார். யூசுப் பதான் தொடர் நாயகன் விருது கைப்பற்றினார்.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios