Asianet News TamilAsianet News Tamil

தரமான தத்துவ மெசேஜுடன் ஊர்வசி ரவுத்தேலாவுடனான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரிஷப் பண்ட்

நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுடனான மோதலுக்கு ஒரு தரமான மெசேஜை பதிவு செய்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரிஷப் பண்ட்.
 

rishabh pant cryptic instagram post to urvashi rautela to finish the words war between them
Author
Chennai, First Published Aug 14, 2022, 3:34 PM IST

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட். 24 வயதான விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டுவருகிறார். ஆரம்பத்தில் தோனியுடன் ஒப்பிடப்பட்டு விமர்சனங்களை எதிர்கொண்ட ரிஷப் பண்ட், விக்கெட் கீப்பிங் திறமையை வளர்த்துக்கொண்டு இன்றைக்கு இந்திய அணியின் முன்னணி வீரராக வளர்ந்துள்ளார்.

ரிஷப் பண்ட் அபாரமாக ஆடி இந்திய அணிக்காக வெற்றிகளை குவித்து, சர்வதேச கிரிக்கெட்டில் குறிப்பிடத்தகுந்த வீரராக வேகமாக வளர்ந்துள்ளார். ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை ஆகிய 2 முக்கியமான பெரிய தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்றால் ரிஷப் பண்ட் நன்றாக ஆடவேண்டும். 

இதையும் படிங்க - ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சீனியர் வீரர் புறக்கணிப்பு..! ரிக்கி பாண்டிங் சொல்லும் நியாயமான காரணம்

இந்நிலையில், நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுடனான சமீபத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2018ம் ஆண்டே ரிஷப் பண்ட் - ஊர்வசி ரவுத்தேலா இடையே காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. அதன்பின்னர் அதைப்பற்றி பேசப்படவில்லை.

ஆனால் அண்மையில் ஊர்வசி ரவுத்தேலாவின் பேட்டி மீண்டும் பரபரப்பை கிளப்பியது. அண்மையில் தமிழில் வெளியான தி லெஜண்ட் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த ஊர்வசி ரவுத்தேலா, அண்மையில் அளித்த ஒரு நேர்காணலில், நான் வாரணாசியில் ஷூட்டிங்கில் இருந்தேன். அங்கிருந்து ஒரு நிகழ்ச்சிக்காக டெல்லிக்கு சென்றேன். 10 மணி நேரம் தொடர்ச்சியான ஷூட்டிங்கிற்கு பிறகு ரூமுக்கு திரும்பினேன். அங்கு என்னை பார்க்க வந்த Mr. RP எனக்காக நீண்டநேரம் லாபியில் காத்துக்கொண்டிருந்தார். நான் மிகுந்த சோர்வாக இருந்தேன். அதனால் எனது ஃபோனை கவனிக்கவில்லை. எனது ஃபோனுக்கு நிறைய மிஸ்டு கால்கள் வந்திருந்தன. 

நான் தூங்கி எழுந்தபோது 16-17 மிஸ்டு கால்கள் இருந்தன. எனக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. பொதுவாக பெண்களுக்கு காக்கவைப்பது பிடிக்கும். அதன்பின்னர் அவரை தொடர்புகொண்டு, மும்பைக்கு வரும்போது சந்திப்போம் என்று கூறிவிட்டேன் என்றார் ரவுத்தேலா.

இதையும் படிங்க - டக் அவுட் ஆகுறதுக்கா உனக்கு கோடிகளை கொட்டி கொடுக்குறோம்.? ரோஸ் டெய்லரை பளார்னு அறைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் ஓனர்

தனது இமேஜை டேமேஜ் செய்யும் விதமான ஊர்வசி ரவுத்தேலாவின் பேட்டிக்கு பதிலடி கொடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ரிஷப் பண்ட், வெற்று விளம்பரத்திற்காகவும், தலைப்பு செய்திகளில் இடம்பெறுவதற்காகவும் சிலர் நேர்காணலில் பொய்களாக பேசுகின்றனர். வெற்று பிரபலத்திற்காக பொய்களை அள்ளி தெளிக்கின்றனர். அவர்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று பதிவிட்டு, சிறிது நேரம் கழித்து அதை டெலிட் செய்தார். ஆனாலும் அந்த ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

அதற்கு பதிலளித்த நடிகை ஊர்வசி ரவுத்தேலா, சின்ன பையா பேட், பந்து மட்டும் விளையாடு என்று நக்கலாக ரிஷப் பண்ட்டை சீண்டினார்.

தேவையில்லாமல் இதை வளரவிட விரும்பாத ரிஷப் பண்ட், நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயத்தை நினைத்து மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடாது என்று இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios