Asianet News TamilAsianet News Tamil

அயர்லாந்து டி20 தொடரில் இடம் பெறும் ரிங்கு சிங், ருதுராஜ் கெய்க்வாட்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் ரிங்கு சிங் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இடம் பெறாத நிலையில், அயர்லாந்துக்கு அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இடம் பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rinku Singh and Ruturaj Gaikwad set to play in the Ireland 3 T20I series
Author
First Published Jul 7, 2023, 3:25 PM IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், அடுத்து மிகப்பெரிய தொடரான ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது. இதற்கு முன்னதாக, இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் சென்று அங்கு பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

உலகக் கோப்பைக்குள் நுழைந்த நெதர்லாந்து: இந்தியா – நெதர்லாந்து மோதும் போட்டிகள் எப்போது?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில், சீனியர் அதாவது மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

MS Dhoni: முதல்வர்கள் முதல் எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கிரிக்கெட், சினிமா பிரபலங்கள்!

அதன்படி, ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, முகேஷ் குமார், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாஅண்டியா (கேப்டன்), அக்‌ஷர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஆவேஷ் கான், முகேஷ் குமார்

தனது ஃபர்ஸ்ட் டி20, முதல் ஒரு நாள் போட்டியில் டக் அவுட்டில் வெளியேறிய தோனி!

இதில், ஜித்தேஷ் சர்மா, ரிங்கு சிங் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று 14 போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்கள்,31 பவுண்டரி, 29 சிக்ஸர்கள் உள்பட 474 ரன்கள் சேர்த்த ரிங்கு சிங்கிற்கு டி20 தொடரில் இடம் இல்லை. இவரது ஸ்டிரைக் ரேட் 149.33. பேட்டிங் ஆவரேஜ் என்னவோ 59.25 தான். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் மட்டும் 5 சிக்ஸர்கள் அடித்து கேகேஆர் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்து எல்லோரது மனதிலும் ஹீரோவாக உயர்ந்து நின்றவர் ரிங்கு சிங்.

கங்குலி, சச்சின் யாரும் படைக்காத சாதனையை படைத்த தோனி!

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இடம் பெற்றுள்ள ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இடம் அளிக்கப்படவில்லை. சஞ்சு சாம்சன் டி20 தொடரில் இடம் பெற்றுள்ளார். வரும் 2024 ஆம் ஆண்டில் டி20 உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ள நிலையில், டி20 அணியை வலுப்படுத்தவே இப்படியொரு யுக்தியை இந்திய தேர்வுக்குழு எடுத்துள்ளதாக தெரிகிறது.

ஹைதராபாத்தில் 52 அடியில் கட் அவுட்; தோனியின் பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள்!

இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது இந்திய அணியில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியா, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதற்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ரிங்கு சிங் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios