உலகக் கோப்பைக்குள் நுழைந்த நெதர்லாந்து: இந்தியா – நெதர்லாந்து மோதும் போட்டிகள் எப்போது?
உலகக் கோப்பை தகுதிச் சுற்று சூப்பர் சிக்ஸ் பிரிவில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி உலகக் கோப்பைக்குள் நுழைந்துள்ளது.
உலகக் கோப்பை தகுதி சுற்றுப் போட்டி தற்போது ஜிம்பாப்வே நாட்டில் நடந்து வருகிறது. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. ஏற்கனவே இந்தியா உள்பட பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. இதையடுத்து எஞ்சிய 2 இடங்களுக்கான உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டி ஜிம்பாப்வே நாட்டில் நடந்து வருகிறது. இதில், ஏற்கனவே சூப்பர் சிக்ஸ் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இலங்கை அணி 9ஆவது அணியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.
ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஓமன் ஆகிய அணிகள் உலகக் கோப்பை வாய்ப்பை இழந்து பரிதாபமாக தொடரிலிருந்து வெளியேறின. இதையடுத்து, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு உலகக் கோப்பைக்கான வாய்ப்பு இருந்தது. ஜிம்பாப்வே மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இதில், ஜிம்பாப்வே அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. அதுமட்டுமின்றி இந்த உலகக் கோப்பையில் இடம் பெறுவதற்கான வாய்ப்பையும் இழந்து சோகத்துடன் இந்த தொடரிலிருந்து வெளியேறியது.
தனது ஃபர்ஸ்ட் டி20, முதல் ஒரு நாள் போட்டியில் டக் அவுட்டில் வெளியேறிய தோனி!
இதையடுத்து நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான சூப்பர் சிக்ஸ் 8 ஆவது போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஸ்காட்லாந்து அணியில் பிராண்டன் மெக்முல்லன் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர், 11 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 106 ரன்கள் குவித்தார். இதையடுத்து ஆடிய கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் 84 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸ்ரகள் உள்பட 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
கங்குலி, சச்சின் யாரும் படைக்காத சாதனையை படைத்த தோனி!
மற்ற வீரர்கள் சொற்ப ரனக்ளில் ஆட்டமிழக்க, ஸ்காட்லாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது. பின்னர், 280 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட நெதர்லாந்து அணியில், பாஸ் டி லீடே 92 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் 123 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாகிப் சுல்பிகர் 33 ரன்கள் எடுக்க, நெதர்லாந்து அணி 42.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹைதராபாத்தில் 52 அடியில் கட் அவுட்; தோனியின் பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள்!
இந்த வெற்றியின் மூலமாக நெதர்லாந்து அணி உலகக் கோப்பைக்கு 10ஆவது அணியாக தகுதி பெற்றது. இதன் மூலமாக, இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நவம்பர் 11 ஆம் தேதி பெங்களூரு மைதானத்தில் நடக்கிறது.
இது தவிர, உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற நெதர்லாந்து அணி,
அக்டோபர் 06 – பாகிஸ்தான் – நெதர்லாந்து – ஹைதராபாத்
அக்டோபர் 09 – நியூசிலாந்து – நெதர்லாந்து – ஹைதராபாத்
அக்டோபர் 17 – தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து – தர்மசாலா
அக்டோபர் 21 – நெதர்லாந்து - இலங்கை
அக்டோபர் 25 – ஆஸ்திரேலியா – நெதர்லாந்து – டெல்லி
நவம்பர் 01 – நெதர்லாந்து – ஆப்கானிஸ்தா.
நவம்பர் 8 – இங்கிலாந்து – நெதர்லாந்து – புனே
நவம்பர் 11 – இந்தியா – நெதர்லாந்து – பெங்களூரு