பவுண்டரி பவுண்டரியாக அடித்த ஸ்மிருதி மந்தனா – ஆர்சிபிக்கு கிடைத்த 2ஆவது வெற்றி!

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 5ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8 விகெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

RCBW Beat GGT by 8 wickets difference in 5th Match WPL 2024 at Bengaluru rsk

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2 ஆவது சீசனின் 5ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங் தேர்வு செய்தது. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியில் கேப்டன் பெத் மூனி 8 ரன்களுக்கு ரேணுகா சிங் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த போஃபே லிட்ச்ஃபீல்டு 5, வேதா கிருஷ்ணமூர்த்தி 9, ஆஷ்லேக் கார்ட்னர் 7 என்று வரிசையாக சொற்ப ரன்களில் நடையை கட்டினர். ஹர்லீன் தியோல் 22 ரன்கள் எடுக்க, காத்ரின் பிரைஸ் 3 ரன்னிலும், சினே ராணா 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி வரை போராடிய தயாளன் ஹேமலதா 31 ரன்கள் எடுத்தார்.

இறுதியாக குஜராத் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஷோபி மோலினெக்ஸ் 3 விக்கெட்டும், ரேணுகா தாகூர் சிங் 2 விக்கெட்டும், ஜார்ஜியா வேர்ஹாம் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து 108 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆர்சிபி களமிறங்குகிறது.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா பவுண்டரி பவுண்டரியாக விளாசி ரன்கள் குவித்தார். ஷோஃபி டிவைன் 6 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்மிருதி மந்தனா 27 பந்துகளில் 8 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 43 ரன்களில் நடையை கட்டினார். அதன் பிறகு வந்த சப்பினேனி மேகனா மற்றும் எல்லீஸ் பெர்ரி இருவரும் நிதானமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஆர்சிபி 12.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலமாக புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடிக்க, மும்பை இந்தியன்ஸ் 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குஜராத் ஜெயிண்ட்ஸ் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ஷொஃபி டிவைன், ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), சப்பினேனி மேகனா, எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஜார்ஜியா வேர்ஹாம், ஷோஃபி மோலினெக்ஸ், ஷ்ரேயங்கா பாட்டீச், சிம்ரன் பகதூர், ஆஷா ஷோபனா, ரேணுகா தாகூர் சிங்

குஜராத் ஜெயிண்ட்ஸ்:

பெத் மூனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), வேதா கிருஷ்ணமூர்த்தி, ஃபோப் லிட்ச்பீல்டு, ஹர்லீன் தியோல், அஷ்லெக் கார்ட்னர், தயாளன் ஹேமலதா, சினே ராணா, தனுஜா கன்வர், கேத்ரின் பிரைஸ், லியா தஹூஹூ, மேக்னா சிங்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios