IPL 2023: ஆர்சிபி - சிஎஸ்கே பலப்பரீட்சை.. டாஸ் ரிப்போர்ட்..! சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றம்

ஐபிஎல் 16வது சீசனில் சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

rcb win toss opt to field against csk in ipl 2023

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றுவருகின்றன.

முதலிரண்டு போட்டிகளில் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மேலேறி வருகிறது. தலா 4 போட்டிகளில் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ள ஆர்சிபி - சிஎஸ்கே அணிகள் இன்று மோதுகின்றன. கடைசி போட்டியில் தோற்ற சிஎஸ்கே அணி தோல்வியிலிருந்து மீண்டெழும் முனைப்பில் இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளது.

IPL 2023: மன்னிப்புலாம் கேட்காதடா தம்பி.. நீ செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்! இந்திய வீரரை உசுப்பிவிட்ட பாண்டிங்

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் ஆர்சிபி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. ஆர்சிபி அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிசாண்டா மகாளா காயத்தால் விலக, இலங்கை ஃபாஸ்ட்பவுலர் மதீஷா பதிரனா ஆடுகிறார்.

ஆர்சிபி அணி:

விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரார், க்ளென் மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படே, வைன் பார்னெல், முகமது சிராஜ், வைஷாக் விஜய்குமார்.

IPL 2023:சுனில் நரைனின் 12ஆண்டுகால ஐபிஎல் கெரியரில் மோசமான ஸ்பெல்! நரைனை நார் நாராய் கிழித்த மும்பை இந்தியன்ஸ்

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), மதீஷா பதிரனா, மஹீஷ் தீக்‌ஷனா, துஷார் தேஷ்பாண்டே.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios