IPL 2023:சுனில் நரைனின் 12ஆண்டுகால ஐபிஎல் கெரியரில் மோசமான ஸ்பெல்! நரைனை நார் நாராய் கிழித்த மும்பை இந்தியன்ஸ்
ஐபிஎல் 16வது சீசனில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் ஐபிஎல்லில் தனது மோசமான ஸ்பெல்லை வீசினார்.
ஐபிஎல்லில் அபாரமாக ஆடி வெற்றிகரமாக திகழும் வீரர்களில் சுனில் நரைனும் ஒருவர். 2012ம் ஆண்டிலிருந்து இப்போதுவரை கேகேஆர் அணிக்காக ஆடிவரும் சுனில் நரைன், 11 சீசன்களாக தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திவருகிறார். 2012 மற்றும் 2014 ஆகிய 2 சீசன்களில் கேகேஆர் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர்.
12 ஆண்டுகளாக ஐபிஎல்லில் ஆடினாலும், அவரது பவுலிங்கை எதிர்கொள்வது இன்றும், டாப் பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. அந்தளவிற்கு சாமர்த்தியமாக வீசிவருபவர் சுனில் நரைன். அவரது பவுலிங் ஸ்டைல் மீது எத்தனையோ குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், அதையெல்லாம் தகர்த்து பவுலிங் ஆக்ஷனை மாற்றி, பல ஆண்டுகளாக அசத்திவருபவர் சுனில் நரைன்.
IPL 2023: ஆர்சிபி - சிஎஸ்கே அணிகளின் உத்தேச ஆடும் லெவன்..! தோல்வியிலிருந்து மீளுமா சிஎஸ்கே..?
பவுலிங்கில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருபவர் சுனில் நரைன். ஐபிஎல்லில் 153 போட்டிகளில் ஆடி 158 விக்கெட் வீழ்த்தியுள்ள சுனில் நரைன், 1034 ரன்களும் அடித்துள்ளார். கேகேஆர் அணிக்கு இக்கட்டான சூழல்களிலெல்லாம் ரன்கள் வழங்காமல் கட்டுக்கோப்புடன் பந்துவீசி போட்டிகளை ஜெயித்து கொடுத்துள்ள மேட்ச் வின்னர் சுனில் நரைன்.
நடந்துவரும் ஐபிஎல் 16வதுசீசனில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் 3 ஓவரில் 41 ரன்களை வாரி வழங்கினார். இதில் ஒரு ஓவரில் 22 ரன்களை வழங்கினார். இதுதான் ஐபிஎல் கெரியரில் அவர் ஒரு ஓவரில் வழங்கிய அதிகபட்ச ரன்கள் ஆகும். இந்த போட்டியில் அவரது எகானமி ரேட் 13.70 ஆகும். இதுதான் ஐபிஎல்லில் அவரது அதிகபட்ச எகானமி ரேட் ஆகும்.