IPL 2023: மன்னிப்புலாம் கேட்காதடா தம்பி.. நீ செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்! இந்திய வீரரை உசுப்பிவிட்ட பாண்டிங்
ஐபிஎல் 16வது சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணி தொடர்ச்சியாக 5 தோல்விகளை தழுவிய நிலையில், தன்னிடம் மன்னிப்பு கேட்ட குல்தீப் யாதவிடம் மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம் என்று ரிக்கி பாண்டிங் கூறினார்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதல் 3 இடங்களில் ஆதிக்கம் செலுத்திவருகிறது.
பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கேகேஆர், ஆர்சிபி அணிகளும் நன்றாக ஆடிவருகின்றன. முதலிரண்டு போட்டிகளில் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, அதற்கடுத்த 2 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றது. ஆனால் ஆடிய 5 போட்டிகளிலும் தொடர் தோல்விகளை தழுவி இந்த சீசனில் படுமோசமாக சொதப்பிவருவது டெல்லி கேபிடள்ஸ் தான்.
டெல்லி கேபிடள்ஸ் அணி தொடர் தோல்வியிலிருந்து மீளமுடியாமல் தவித்துவரும் நிலையில், அந்த அணியின் பயிற்சியாளர் குழு மற்றும் அணி நிர்வாகத்தின் செயல்பாடு விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. டெல்லி கேபிடள்ஸ் அணி சிறப்பாக ஆடும்போது அதற்கான கிரெடிட்டை ஏற்றுக்கொள்ளும் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தோல்விக்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சேவாக் தெரிவித்திருந்தார்.
டெல்லி கேபிடள்ஸ் அணி தோற்பது பிரச்னையல்ல. ஆனால் இலக்குகளை விரட்டும்போது அதை நெருங்கக்கூட முடியாமல் பெரிய வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. அதனால் அந்த அணியின் நெட் ரன்ரேட் -1.4 ஆக உள்ளது. டெல்லி கேபிடள்ஸ் அணி தொடர் தோல்விகளை தழுவுவது ஒரு பிரச்னை என்றால், தோற்கும் விதம் பெரும் கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.
சௌரவ் கங்குலி, ரிக்கி பாண்டிங் ஆகிய மிகப்பெரிய ஜாம்பவான்கள் அந்த அணியின் நிர்வாகத்தில் இடம்பெற்றிருந்த போதிலும் அந்த அணி படுதோல்விகளை சந்திப்பது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. கடந்த போட்டியில் தோற்றதற்கு பின், ரிக்கி பாண்டிங்கிடம் குல்தீப் யாதவ் மன்னிப்பு கேட்க, மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம் என்று பாண்டிங் தெரிவித்தார்.
IPL 2023: ஆர்சிபி - சிஎஸ்கே அணிகளின் உத்தேச ஆடும் லெவன்..! தோல்வியிலிருந்து மீளுமா சிஎஸ்கே..?
டெல்லி கேபிடள்ஸ் அணியின் ஆட்டம் குறித்து, பக்கத்தில் கங்குலி நிற்கவைத்துக்கொண்டு பேசிய ரிக்கி பாண்டிங், குல்தீப் யாதவ்... எங்கே இருக்கிறாய்..? கடந்த போட்டி ஏமாற்றத்தில் முடிந்த நிலையில், நீ என்னிடம் மன்னிப்பு கேட்டாய். மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம். கிரிக்கெட் களத்தில் இதெல்லாம் சகஜம் தான். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இதைவிட வலுவாய் மீண்டுவந்து சிறப்பாக ஆட வேண்டும். இந்த போட்டியில் 23 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினாய். அடுத்த போட்டியில் இதைவிட நன்றாக பந்துவீசு என்று ஊக்கப்படுத்தினார் பாண்டிங்.