IPL 2024, RCB New Jersey: இனி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கிடையாது, லோகோ, ஜெர்சி, டீம் நேமை மாத்திய ஆர்சிபி!
ஐபிஎல் 2024 தொடர் தொடங்குவதற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற அணியின் பெயரானது தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது முதல் ராயல் சேலஞ்சஸ்ர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் தொடரில் இடம் பெற்று விளையாடி வருகிறது. இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்து 17ஆவது சீசனும் வரும் 22 ஆம் தேதி வெள்ளியன்று தொடங்க இருக்கிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரின் பெயரானது பெங்களூரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது முதல் பெங்களூர் அணியின் பெயரையும் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. பெயர் மாற்றம் செய்யாத நிலையில் தான் 16 சீசன்களாக ஆர்சிபி டிராபியை கைப்பற்றவில்லை என்று கூறப்பட்டது. எனினும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனில் ஆர்சிபி மகளிர் அணி டிராபியை கைப்பற்றி சரித்திரம் படைத்தது.
இந்த நிலையில் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் என்றிருந்த அணியின் பெயரானது தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் நடந்த ஆர்சிபி அன்பாக்ஸ் நிகழ்ச்சியில் மகளிர் பிரீமியர் லீக் ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஆர்சிபி ஆண்கள் அணி கேப்டன் பாப் டூப்ளெசிஸ், விராட் கோலி ஆகியோர் கலந்து கொண்டனர். அணியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது மட்டுமின்றி லோகோவும் மாற்றப்பட்டுள்ளது. அதோடு அணியின் ஜெர்சியும் மாற்றப்பட்டுள்ளது.
இதுவரை சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் ஜெர்ஸியை அணிந்து வந்த நிலையில் இனி, நீலம், சிவப்பு கலந்த புதிய ஜெர்சியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் விளையாட இருக்கின்றனர். புதிய ஜெர்சியின் லக், சேப்பாக்கத்தில் நடக்கும் முதல் போட்டியில் தெரிந்துவிடும். இந்த நிகழ்வின் போது விராட் கோலி கன்னட மொழியில் பேசி அசத்தியுள்ளார். மேலும், எந்த காலத்திலும் ஆர்சிபி அணியை விட்டு விலகமாட்டேன் என்று கூறியுள்ளார்.