Asianet News TamilAsianet News Tamil

IPL 2023: ஏலத்திற்கு பின் எதுவுமே மாறாத ஆர்சிபி அணியின் ஆடும் லெவன்

ஐபிஎல் 16வது சீசனில் களமிறங்கும் ஆர்சிபி அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
 

rcb ideal playing eleven combination for ipl 2023
Author
First Published Dec 24, 2022, 10:24 PM IST

ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலம் டிசம்பர் 23 கொச்சியில் நடந்தது. இந்த ஏலத்தில் வெறும் ரூ.8.75 கோடியுடன் ஏலத்திற்கு சென்ற ஆர்சிபி அணி, வில் ஜாக்ஸை அதிகபட்சமாக ரூ.3.2 கோடிக்கு எடுத்தது. ஃபஃபஸ்ட் பவுலர் ரீஸ் டாப்ளியை ரூ.1.9 கோடிக்கு வாங்கிய ஆர்சிபி, ரஜன் குமார், அவினாஷ் சிங், சோனு யாதவ், ஹிமான்ஷு ஷர்மா, மனோஜ் பண்டகே ஆகிய உள்நாட்டு வீரர்களை சிறிய தொகைக்கு எடுத்தது.

BAN vs IND: நானே அவுட்டான கடுப்புல இருக்கேன்.. இவனுங்க வேற..! வரிந்து கட்டிய கோலி.. வைரல் வீடியோ

ஆர்சிபி அணியின் கோர் டீம் ஏற்கனவே வலுவாக செட் செய்யப்பட்டுவிட்டதால் அதிக தொகை கொடுத்து எந்த வீரரையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அதேபோல ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களுக்கு பிரதான ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. ஏலத்திற்கு முன்பே ஆடும் லெவனை உறுதி செய்தே வைத்திருந்தது ஆர்சிபி. அதே ஆடும் லெவனுடன் தான் களமும் இறங்கும். கடந்த சீசனில் ஆடிய ஆடும் லெவன் காம்பினேஷனில் மாற்றம் செய்யப்பட தேவையில்லை என்கிற அளவிற்கு அந்த அணியின் காம்பினேஷன் சரியாக இருக்கிறது.

க்ளென் மேக்ஸ்வெல் காயத்தால் ஆடமுடியாத பட்சத்தில் அவரது இடத்தில் வில் ஜாக்ஸும், ஹேசில்வுட் இடத்தில் ரீஸ் டாப்ளியும் மாற்றி இறக்கப்படலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகக்குறைவு. தேவை ஏற்பட்டால் மட்டுமே அந்த மாற்றங்கள் செய்யப்படும்.

IPL 2023: குறைவான தொகையில் நிறைவான தேர்வு.. KKR அணியில் ஆதிக்கம் செலுத்தும் தமிழக வீரர்கள்! வலுவான ஆடும் லெவன்

ஆர்சிபி அணியின் வலுவான ஆடும் லெவன்:

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் பட்டிதர், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரார், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios