Asianet News TamilAsianet News Tamil

RCB Released Players List: ஜோஷ் ஹசல்வுட் விடுவிக்கப்பட காரணம் என்ன? ரகசியத்தை வெளியிட்ட தலைமை பயிற்சியாளர்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்ற ஆஸ்திரேலியா வீரர் ஜோஷ் ஹசல்வுட் விடுவிக்கப்பட்ட காரணத்தை அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் வெளியிட்டுள்ளார்.

RCB Head Coach Andy Flower Explain Why Josh Hazlewood Released from Royal Challengers Bangalore ahead of IPL Auction 2024 rsk
Author
First Published Nov 27, 2023, 1:33 PM IST | Last Updated Nov 27, 2023, 1:33 PM IST

ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் வரும் ஏப்ரல் மே மாதங்களில் இந்தியாவில் நடக்க இருக்கிறது. ஐபிஎல் 2024க்கான ஏலம் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. ஆனால், அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளும் மற்றும் விடுவிக்கும் வீர்ரகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மும்பைக்கு போன ஹர்திக் பாண்டியா: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாகும் சுப்மன் கில்!

அதன்படி ஒவ்வொரு அணியிலிருந்தும் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலிருந்து மட்டும் 11 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அதில், ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்று உலகக் கோப்பையில் விளையாடிய ஜோஷ் ஹசல்வுட்டும் ஒருவர். இறுதிப் போட்டியில் மட்டுமே ரவீந்திர ஜடேஜா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரது விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.

தக்க வைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியீடு – எந்த அணி எத்தனை கோடி வச்சிருக்கு தெரியுமா?

இந்த தொடரில் மட்டும் அவர் 16 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். ஆர்சிபி அணியில் ரூ.7.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு அணியில் இடம் பெற்றிருந்த ஹசல்வுட் கடந்த சீசனில் 3 போட்டிகளில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். ஐபிஎல் தொடரில் 27 போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில், ஆர்சிபி அணியிலிருந்து ஏன் ஹசல்வுட் விடுவிக்கப்பட்டார் என்பதற்கான காரணத்தை அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் சுழல், வேகத்தை தாக்க பிடிக்க முடியாமல் சிதறிய ஆஸ்திரேலியா; ஸ்கைக்கு கிடைத்த 2ஆவது வெற்றி!

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: வரும் மார்ச் மாதம் ஹசல்வுட்டின் மனைவிக்கு குழந்தை குழந்தை பிறக்க இருக்கிறது. அவர் அணியில் இடம் பெற்றிருந்தால் பாதி தொடர்கள் வரை விளையாட வாய்ப்பில்லை. ஆகையால், அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான கேமரூன் க்ரீன், ஆர்சிபி அணியில் டிரேட் முறையில் ரூ.17.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.    

Yashasvi Jaiswal: ரோகித் சர்மா, கேஎல் ராகுல் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:

பாப் டூ ப்ளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, ரஜத படிட்கர், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், மஹிபால் லோம்ரோர், கரண் சர்மா, மனோஜ் பண்டேஜ், மாயங்க் டகர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), வைஷாக் விஜய் சங்கர், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ரீஸ் டாப்ளி, ஹிமான்சு சர்மா, ராஜன் குமார்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

வணிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹசல்வுட், பின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டேவிட் வில்லி, வெய்ன் பர்னெல், சோனு யாதவ், அவினாஷ் சிங், சித்தார்த் கவுல், கேதர் ஜாதவ்.

பர்ஸ் தொகை: ரூ.40.75 கோடி

ஆர்சிபி அணி 11 வீரர்களை விடுவித்த நிலையில், அதிகபட்சமாக ரூ.40.75 கோடி வரையில் தக்க வைத்துக் கொண்டது. வரும் டிசம்பர் மாதம் நடக்க இருகும் ஏலத்தில் அதிக தொகை கொடுத்து முக்கிய வீரரை தட்டி தூக்க ஆர்சிபி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios