IPL 2023: ஜோஷ் ஹேசில்வுட்டும் விலகல்..! ஆர்சிபிக்கு மரண அடி

ஐபிஎல் 16வது சீசனின் முதல் பாதி போட்டிகளில் ஜோஷ் ஹேசில்வுட் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வில் ஜாக்ஸ், ரஜத் பட்டிதார் ஆகியோர் ஆடாத நிலையில், ஹேசில்வுட்டும் முதல் பாதி சீசனிலிருந்து விலகியது ஆர்சிபி அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
 

rcb fast bowler josh hazlewood will miss first half of ipl 2023

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 16வது சீசன் நாளை (மார்ச் 31) தொடங்குகிறது. விராட் கோலி என்ற தலைசிறந்த வீரரை அணியில் பெற்றிருந்தும் அந்த அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. 

ஒவ்வொரு சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கி கடைசியில் ஏமாற்றத்துடன் சீசனை முடிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளது ஆர்சிபி அணி. கடந்த சீசனுக்கு முன்பாக விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகியதால், ஃபாஃப் டுப்ளெசிஸின் தலைமையில் கடந்த சீசனில் ஆடிய ஆர்சிபி அணி, இந்த சீசனிலும் அவரது கேப்டன்சியிலேயே ஆடுகிறது.

IPL 2023: இந்த சீசனில் கண்டிப்பாக அந்த அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும்..? அடித்து சொல்லும் மைக்கேல் வான்

இந்த முறை பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே வலுவான அணியாகவும் நல்ல பேலன்ஸான அணியாகவும் திகழ்கிறது. அந்த அணியின் பேட்டிங் எல்லா சீசன்களிலும் சிறப்பாகவே இருந்திருக்கிறது. பவுலிங் தான் பலவீனமாக இருந்தது. இந்நிலையில், இந்த சீசனில் ஆர்சிபி அணியின் பவுலிங் யூனிட் தான் மிகச்சிறந்த யூனிட்டாக அமைந்த மகிழ்ச்சியில், வலுவான மற்றும் பேலன்ஸான அணியாக இருக்கும் திருப்தியில் இருந்தது ஆர்சிபி.

ஆனால் ஐபிஎல் தொடங்கும் நிலையில், அந்த சந்தோஷத்திலும் மண் விழுந்துள்ளது. ஆர்சிபி அணி ரூ.7.75 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கிய ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் ஜோஷ் ஹேசில்வுட் முதல் பாதி சீசனிலிருந்து விலகியுள்ளார். காயம் காரணமாக இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறாத ஜோஷ் ஹேசில்வுட் முதல் பாதி ஐபிஎல் சீசனிலிருந்து விலகியுள்ளார். ஐபிஎல் முடிந்த அடுத்த சில தினங்களில் ஆஷஸ் டெஸ்ட் தொடர் தொடங்குவதால் அதில் ஆடுவதற்கு ஜோஷ் ஹேசில்வுட்டின் ஃபிட்னெஸ் ஆஸ்திரேலிய அணிக்கு முக்கியம். 

இந்த சீசனில் தான் ஆர்சிபி அணியின் பவுலிங் யூனிட் வலுவாக இருக்கிறது என கருதப்பட்ட நிலையில், ஜோஷ் ஹேசில்வுட் விலகியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவு. 

IPL 2023: சிஎஸ்கே அணியின் பலங்கள் & பலவீனங்கள்..! ஓர் அலசல்

அந்த அணிக்கு அடுத்தடுத்து அடிகள் விழுகின்றன. பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்தும் விதமாக ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து அதிரடி வீரர் வில் ஜாக்ஸ், இந்த சீசனிலிருந்து விலகினார் .அவருக்கு மாற்று வீரராக நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் அறிவிக்கப்பட்டார். ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ள ரஜத் பட்டிதாரும் காயம் காரணமாக முதல் பாதி சீசனிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில், ஜோஷ் ஹேசில்வுட்டும் விலகியுள்ளார்.

முகமது சிராஜ், ஹர்ஷல் படேல் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்கள் ஆர்சிபி அணியில் உள்ளனர். ஹேசில்வுட் இடத்தில் இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ரீஸ் டாப்ளி இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios