Asianet News TamilAsianet News Tamil

IPL 2023: இந்த சீசனில் கண்டிப்பாக அந்த அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும்..? அடித்து சொல்லும் மைக்கேல் வான்

ஐபிஎல் 16வது சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

michael vaughan predicts rajasthan royals will win ipl trophy this year
Author
First Published Mar 30, 2023, 2:22 PM IST

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 16வது சீசன் நாளை(மார்ச் 31) தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் கடந்த சில நாட்களாக தீவிரமாக தயாராகிவருகின்றன. 

ஐபிஎல்லில் 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ், 4 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே ஆகிய ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகள் மீண்டும் ஒரு முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் தயாராகிவருகின்றன. அதேபோல, இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகளும் வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதல் கோப்பையை எதிர்நோக்கி களமிறங்குகின்றன.

IPL 2023: சிஎஸ்கே அணியின் பலங்கள் & பலவீனங்கள்..! ஓர் அலசல்

ஐபிஎல் தொடங்கப்பட்ட முதல் சீசனில் 2008ம் ஆண்டு கோப்பையை வென்று சாதனை படைத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதன்பின்னர் கோப்பையை வெல்லவில்லை. கடந்த சீசனில் ஃபைனல் வரை சென்றும் கூட, அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸிடம் தோற்று கோப்பையை இழந்ததால், இந்த முறை கோப்பையை வெல்லும் உறுதியுடன் வலுவான அணியுடன் களமிறங்குகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

கேகேஆர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய பழைய அணிகளும், புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் என அனைத்து அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள நிலையில், இந்த சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று மைக்கேல் வான் ஆருடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவீட் செய்துள்ள மைக்கேல் வான், இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸுக்கானது. இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் கண்டிப்பாக கோப்பையை தூக்கும் என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

பயிற்சியாளர் குமார் சங்கக்கராவின் வழிகாட்டுதலில் சஞ்சு சாம்சனின் கேப்டன்சியில் ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், ஹெட்மயர், ரியான் பராக் என அனுபவமும் இளமையும் கலந்த அதிரடி பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அஷ்வின், சாஹல் ஆகிய 2 சீனியர் ஸ்பின்னர்கள் உள்ளனர். ஃபாஸ்ட் பவுலர்கள் டிரெண்ட் போல்ட், குல்தீப் சென்னுடன் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டரும் இருக்கிறார். எனவே பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே வலுவான அணியாக திகழ்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

அந்த பையன் இந்தியாவிற்கு ஆட ரெடி ஆகிட்டான்.. ரோஹித்துக்கும் அது தெரியும்.. உடனே டீம்ல எடுங்க! கங்குலி கருத்து

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios