Asianet News TamilAsianet News Tamil

#IPL2021 அவருதான் எங்களோட டெத் பவுலர்..! உறுதி செய்த ஆர்சிபி கேப்டன் கோலி

ஹர்ஷல் படேல் தான் ஆர்சிபி அணியின் டெத் பவுலர் என்று அந்த அணியின் கேப்டன் விராட் கோலி உறுதி செய்துள்ளார்.
 

rcb captain virat kohli confirms harshal patel is a death bowler for the ream
Author
Chennai, First Published Apr 10, 2021, 4:54 PM IST

ஐபிஎல்லில் ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத  ஆர்சிபி அணி, இந்த சீசனிலாவது கோப்பையை வெல்லும் முனைப்பில் க்ளென் மேக்ஸ்வெல், டேனியல் கிறிஸ்டியன், கைல் ஜாமிசன் ஆகிய வீரர்களுடன் களமிறங்கியது. 

முதல் போட்டியில் சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. வழக்கமாக கடைசி சில ஓவர்களில் ரன்களை வாரி வழங்கும் ஆர்சிபி அணி. டெத் ஓவர்களில் ரன்களை அதிகமாக வழங்குவதுதான் அந்த அணியின் தோல்விக்கே காரணமாக அமைந்திருக்கிறது. 

rcb captain virat kohli confirms harshal patel is a death bowler for the ream

ஆனால் அதற்கு முற்றிலும் முரணாக, மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் கடைசி 4 ஓவர்களில் வெறும் 24 ரன்கள் மட்டுமே வழங்கிய ஆர்சிபி அணி, கடைசி 4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது. அதற்கு முக்கிய காரணம் ஹர்ஷல் படேல். கடைசி ஓவரில் மட்டுமே 3 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். 

4 ஓவர்கள் வீசிய ஹர்ஷல் படேல், வெறும் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஐபிஎல்லில் மும்பை அணிக்கு எதிரான சிறந்த பவுலிங் இதுதான். 

rcb captain virat kohli confirms harshal patel is a death bowler for the ream

இந்நிலையில், ஹர்ஷல் படேல் குறித்து போட்டிக்கு பின்னர் பேசிய ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, ஐபிஎல்லில் நேற்று வீசப்பட்ட கடைசி 6 ஓவர்கள் தான், எங்கள் அணியின் சிறந்த டெத் ஓவர்கள். ஹர்ஷல் படேலின் பவுலிங் தான் ஆட்டத்தில் பெரிய வித்தியாசமாக அமைந்தது. 20-25 ரன்களை குறைத்துவிட்டார். அவர் தான் ஆர்சிபியின் டெத் பவுலர். அவர் எடுத்த விக்கெட்டுகள் எல்லாம் குத்துமதிப்பாக விழுந்தவையல்ல. வீரர்களை பற்றி அறிந்து திட்டமிட்டே அந்த விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்று கோலி தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios