IPL 2023: RCB-க்கு கடும் சவால்.. கடைசி லீக் போட்டியில் களமிறங்கும் RCB - GT அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
ஐபிஎல் 16வது சீசனின் கடைசி லீக் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இன்று குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்ளும் நிலையில், ஆர்சிபி - குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசன் லிக் சுற்று போட்டிகள் இன்று முடிகின்றன. குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்ட நிலையில், கடைசி இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
இன்று அந்த 2 அணிகளுக்குமே போட்டிகள் இருக்கின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ரன்சரைசர்ஸும் மோதுகின்றன. இரவு நடக்கும் போட்டியில் ஆர்சிபி - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளில் ஜெயிக்கும் அணி பிளே ஆஃபிற்கு முன்னேறும். ஒருவேளை 2 அணிகளுமே ஜெயிக்கும் பட்சத்தில், நெட் ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி முன்னேறும்.
இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டியில் வெற்றி கட்டாயத்தில் களமிறங்கும் ஆர்சிபி அணி, வலுவான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்வது கூடுதல் சவால். இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
உத்தேச ஆர்சிபி அணி:
விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத்,க்ளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், மஹிபால் லோம்ரோர், ஷபாஸ் அகமது, வைன் பார்னெல், ஹர்ஷல் படேல், கரன் ஷர்மா, முகமது சிராஜ்.
உத்தேச குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா, ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், ஜோஷுவா லிட்டில், நூர் அகமது, முகமது ஷமி, மோஹித் சர்மா.