IND vs SL: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா 5ஆவது இடம்!

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 18 இன்னிங்ஸில் விளையாடி 24 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

Ravindra Jadeja is 5th in the list of highest wicket takers in Asia Cup cricket!

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தான் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட்டின் 16ஆவது எடிஷனை நடத்துகின்றன. இதில், லீக் போட்டிகள் முடிந்து தற்போது சூப்பர் 4 சுற்று போட்டி நடந்து வருகிறது. இன்னும் 2 போட்டிகளில் சூப்பர் 4 போட்டியும் முடிகிறது. இதில், நேற்று நடந்த 4ஆவது சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.

பாகிஸ்தானை விட இலங்கை உடன் தான் இந்தியா சிறப்பாக விளையாடியது – கௌதம் காம்பீர்!

முதலில் ஆடிய இந்தியா 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் துனித் வெல்லலகே இந்திய அணியின் டாப் பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதே போன்று சரித் அசலங்கா 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்.

பாகிஸ்தானுக்கு புதிய சிக்கல்; காயம் காரணமாக அகா சல்மான் ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகல்?

பின்னர் ஆடிய இலங்கை குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா சுழலில் சுருண்டது. இலங்கை 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா, இலங்கை வீரர்களான தனஞ்சயா டி சில்வா மற்றும் தசுன் ஷனாகா ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலமாக இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதானின் 22 விக்கெட்டுகள் சாதனையை முறியடித்துள்ளார். பதான் 12 இன்னிங்ஸில் 22 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.

இதெல்லாம் நடந்தால் இந்தியா தான் நம்பர் 1 டீம்; ஆஸி., பாக்., எல்லாம் இனி இந்தியாவுக்கு அப்புறம் தான்!

ஆனால், ரவீந்திர ஜடேஜா 18 இன்னிங்ஸில் விளையாடி 24 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். குல்தீப் யாதவ் 9 இன்னிங்ஸில் 19 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மொத்தத்தில், ஜடேஜா ஆசிய கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்களில் 5ஆவது இடத்தில் உள்ளார். இதில், முத்தையா முரளிதரன் 30 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SL vs PAK: பாகிஸ்தானா? இலங்கையா? இறுதிப் போட்டி யாருக்கு?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios