பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடியதை விட, இலங்கை உடனான போட்டியில் தான் சிறப்பாக விளையாடியது என்று இந்திய அணியி முன்னாள் வீரர் கௌதம் காம்பீர் கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதன் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சூப்பர் 4 சுற்று போட்டி தொடங்கப்பட்டது.
பாகிஸ்தானுக்கு புதிய சிக்கல்; காயம் காரணமாக அகா சல்மான் ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகல்?
கடந்த 10 ஆம் தேதி தொடங்கிய சூப்பர் 4 சுற்று போட்டியின் 3ஆவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங் ஆடிக் கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டது. அதன் பிறகு ரிசர்வ் டேக்கு போட்டி மாற்றப்பட்டது. அப்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. இதில், ரோகித் சர்மா 56 ரன்னிலும், சுப்மன் கில் 58 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதெல்லாம் நடந்தால் இந்தியா தான் நம்பர் 1 டீம்; ஆஸி., பாக்., எல்லாம் இனி இந்தியாவுக்கு அப்புறம் தான்!
பின்னர் வந்த ராகுல் 17 ரன்னிலும், விராட் கோலி 8 ரன்னிலும் விளையாடிக் கொண்டிருந்தனர். இருவரும் அடுத்த நாள் ஆட்டத்தை தொடங்கினர். இதில், இறுதியாக இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 122* ரன்னும், கேஎல் ராகுல் 111* ரன்னும் எடுத்தனர். இதையடுத்து கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலமாக இந்திய அணி அதிகபட்சமாக 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், பும்ரா, ஹர்திக் பாண்டியா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
SL vs PAK: பாகிஸ்தானா? இலங்கையா? இறுதிப் போட்டி யாருக்கு?
பாகிஸ்தான் போட்டியைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 சுற்றின் 4ஆவது போட்டியில் இந்தியா விளையாடிது. இதில், முதலில் விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 53 ரன்கள் எடுத்தார். எளிய இலக்கை துரத்திய இலங்கை அணி 172 ரன்கள் எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IND vs SL: அனில் கும்ப்ளே, அஜித் அகர்கர் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்!
இந்த நிலையில், இந்திய அணியின் வெற்றி குறித்து முன்னாள் வீரர் கௌதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்திய அணியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு காயத்திற்கு பிறகு அணிக்கு திரும்பிய பும்ரா மீது அதிக சந்தேகம் இருந்தது. அவர் எப்படி பந்து வீசுவார்? விக்கெட் கைப்பற்றுவாரா? என்றெல்லாம் சந்தேகம் இருந்தது. ஆனால், கொழும்பு மைதானத்தில் 200 ரன்களுக்கு இலங்கை அணியை சுருட்டியது சிறப்பு வாய்ந்தது. இந்த மைதானத்தில் இப்படியெல்லாம் இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இலங்கை சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். அவர்களுக்கு எதிராக வெற்றி பெறுவது மிகவும் கடினம். அவர்கள் தான் நடப்பு சாம்பியன். கடந்த முறை ஆசிய கோப்பையை அவர்கள் தான் வென்று இருக்கிறார்கள். இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தான் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு விக்கெட் எடுக்கும் போதும் இந்திய அணிக்கு நம்பிக்கை அதிகரிக்கிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியதை விட இலங்கைக்கு எதிராக தான் சிறப்பாக விளையாடியது என்று கூறியுள்ளார்.
