இதெல்லாம் நடந்தால் இந்தியா தான் நம்பர் 1 டீம்; ஆஸி., பாக்., எல்லாம் இனி இந்தியாவுக்கு அப்புறம் தான்!
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அடுத்து நடக்க உள்ள வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று கடைசியாக இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்றால் இந்தியா தான் நம்பர் ஒன் அணியாக முன்னேறும்.
பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் 16ஆவது எடிஷனுக்கான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாள், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 6 அணிகள் இடம் பெற்றன. முதலில் நடந்த லீக் போட்டியில் நேபாள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறின.
SL vs PAK: பாகிஸ்தானா? இலங்கையா? இறுதிப் போட்டி யாருக்கு?
இதையடுத்து இந்தியா, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதில், பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய 3 அணிகள் முதல் 3 சூப்பர் 4 போட்டி சுற்று போட்டியில் வெற்றி பெற்றன. நேற்று 4ஆவது சூப்பர் 4 சுற்று போட்டி நடந்தது. இதில், இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதின.
இதில், இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், ஐசிசி ரேங்கில் பட்டியலில் இந்தியா நம்பர் 1 அணியாக வருவதற்கு அடுத்து நடக்க உள்ள வங்கதேசத்திற்கு எதிரான கடைசி சூப்பர் 4 போட்டியிலும், இறுதிப் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற வேண்டும்.
IND vs SL: அனில் கும்ப்ளே, அஜித் அகர்கர் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்!
அதுமட்டுமின்றி, இலங்கைக்கு எதிராக நாளை நடக்க உள்ள போட்டியில் பாகிஸ்தான் தோற்க வேண்டும். மேலும், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி 2 ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா தோற்க வேண்டும். இதெல்லாம் நடந்தால் ஐசிசி ஒருநாள் அணிகள் பட்டியலில் இந்தியா நம்பர் 1 இடம் பிடிக்கும். தற்போது 118 ரேட்டிங்கில் ஆஸ்திரேலியா நம்பர் 1 இடத்திலும், பாகிஸ்தான் 2 இடத்திலும், இந்தியா நம்பர் 3 இடத்திலும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 3 டி20 போட்டியிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடுகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 3 டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த முதல் 2 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், நேற்று நடந்த 3ஆவது ஒரு நாள் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது ஒரு நாள் போட்டி நாளை நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி: கடைசி வரை போராடி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்