வணக்கம் சென்னை என்று ரவீந்திர ஜடேஜா போட்ட ஒரு டுவீட்டுக்கு ரசிகர்கள் வரவேற்று டுவீட் செய்து வருகின்றனர். 

கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா விலகினார். அதன் பிறகு அவருக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக அவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்கவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இதுவரையில் ஒரு போட்டியில் கூட ரவீந்திர ஜடேஜா பங்கேறவில்லை.

திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவியாக போஸ் கொடுக்கும் கேஎல் ராகுல் அதியா ஷெட்டி!

இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா இடம் பெற்றுள்ளார். இந்த தொடர் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடக்க இருக்கிறது.

பிரமாண்டமாக நடக்கும் கேஎல் ராகுல் அதியா ஷெட்டி திருமணம்! நேரம் எப்போது தெரியுமா?

இந்த நிலையில், தற்போது ரஞ்சி டிராபில் தொடரின் இறுதி லீக் போட்டி நாளை சென்னையில் நடக்க இருக்கிறது. தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி தொடரில் சௌராஷ்டிரா அணியில் ரவீந்திர ஜடேஜா இடம் பெற்றுள்ளார். இந்தப் போட்டி நாளை செவ்வாய்க்கிழமை சென்னையில் நடக்க இருக்கிறது. இதன் காரணமாக டுவிட்டரில் வணக்கம் சென்னை என்று குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள், டுவிட்டரில் வரவேற்று வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்.

கேஎல் ராகுலின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியத்தை சொல்லும் டாட்டூஸ்!

சென்னை ஜடேஜாவை வரவேற்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எனக்கு பிடித்த வீரர் நீங்கள் தான் என்று ரசிகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

எனக்கு முன்மாதிரியாக விளங்கும் எனக்கு பிடித்த வீரர் ஜடேஜா உங்களுக்கு வணக்கம். சிங்கம் மீண்டும் களத்திற்கு வருகிறது என்று ரசிகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

Scroll to load tweet…

ஜட்டு உங்களது சிறந்த ஆட்டத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறோம்.