ஆழ்வார்பேட்டை, ஜாலி ரோவர்ஸ், தமிழ்நாடு என்று ஆடிய சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கொடுத்த குஜராத் டைட்டன்ஸ்!

இதுவரையில் ஆழ்வார்பேட்டை கிரிக்கெட் கிளப், ஜாலி ரோவர்ஸ், தமிழ்நாடு கிரிக்கெட் டீம் என்ற ஆடிய சாய் சுதர்சனின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருந்த நிலையில் தான் குஜராத் டைட்டன்ஸ் அவரை அடிப்படை விலைக்கு ஏலம் எடுத்தது என்று ரவிச்சந்திரன்ஸ் அஸ்வின் கூறியுள்ளார்.

Ravichandran Ashwin Praise Gujarat Titans Player Sai Sudharsan

சென்னை மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங் ஆடியது. 

கேட்சே பிடிக்க மாட்ரான், ஆட்டோகிராஃப் வங்க மொத ஆளா வந்துர்றான் – தீபக் சாஹர் அண்ட் தோனி சமரசம்!

இதில், தொடக்க வீரர் சுப்மன் கில் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சென்னையைச் சேர்ந்த சாய் சுதர்சன் களமிறங்கினார். 10 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் 86 ரன்னுக்கு ஒரு விக்கெட் இழந்து விளையாடி வந்தது. இதில், சாய் சுதர்சன் 9 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதன் பிறகு 38 பந்துகளில் 90 ரன்கள் குவித்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.

சொன்னபடியே கோப்பையை தட்டித்தூக்கி கெத்து காட்டிய தோனி... அன்புடன் வாழ்த்திய குஷ்பு

இதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 31 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்டியாவிற்காக ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். ஆ.னால், முதல் குவாலிஃபையர் போட்டியில் சாய் சுதர்சன் இடம் பெறவில்லை.

கடைசி நிமடங்களில் BP மாத்திரை போட வைத்த போட்டி! மக்கள் மனங்களை வென்றெடுத்த தோனி! ஜெயக்குமார் புகழாரம்.!

ஆனால், நேற்றைய போட்டியில் பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே ஓவர்களில் ஒவ்வொரு வீரரும் அடிப்பதற்கு பயப்படும் நிலையில், அசால்ட்டாக அவர்களது ஓவர்களில் பவுண்டரியும், சிக்ஸரும் விரட்டி தனது திறமையை நிரூபித்திக்கிறார். இந்த நிலையில் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் 21 வயதேயான சாய் சுதர்சனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் ஒரு போட்டியில் மட்டுமே ஆடிய நிலையில் அவர் டிஎன் ரஞ்சி டிராபியில் விளையாடினார்.

இதையும் படிங்க;- ஓம் சக்தி ஓம் சக்தி சமயபுர்த்து மகமாயி என்று கெஞ்சி வெறித்தனமாக சிஎஸ்கே வெற்றியை கொண்டாடிய ரசிகர்!

சாய் சுதர்சனின் ஒயிட் மற்றும் ரெட் பந்துகளின் சிறப்பான ஆட்டத்தால் அவரை வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து அவரது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஆழ்வார்பேட்டை கிரிக்கெட் கிளப்பிலிருந்து ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப்பிற்கு வந்து அதன் பிறகு தமிழ்நாடு கிரிக்கெட் டீமில் ஆடிய சாய் சுதர்சனுக்கு தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணி அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு வாய்ப்பு கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios