Asianet News TamilAsianet News Tamil

வங்கதேச வீரர்கள் ரொம்பவே ப்ரெஷர் கொடுத்தார்கள்: மேன் ஆஃப் தி மேட்ச் அஸ்வின் ஓபன் டாக்!

வங்கதேசத்திற்கு எதிரான 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
 

Ravichandran Ashwin explain india team victory and bangladesh bowling pressure
Author
First Published Dec 25, 2022, 12:53 PM IST

வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி முதலில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டி த்ரில்லிங் மேட்சாகவே சென்றது. டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 314 ரன்கள் குவித்தது. பின்னர், 2ஆவது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி 236 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 145 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

வங்கதேசத்தை பஞ்சு பஞ்சாக்கிய அஸ்வின், ஷ்ரேயாஸ்: இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. கே எல் ராகுல் (2), சுப்மன் கில் (7), புஜாரா (6), விராட் கோலி 1 என்று 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அடுத்து வந்த அக்‌ஷர் படேல், உனட்கட் நிலைத்து நின்றனர். 3 ஆம் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் குவித்தது. பின்னர் 4 ஆம் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியில் உனட்கட் 13 ரன்னிலும், அக்‌ஷர் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரிஷப் பண்ட் நிலைத்து நின்று ஆடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் அளித்தார்.

மோசமான பார்மில் விராட் கோலி: 2 டெஸ்ட் ஸ்கோரும் சேர்ந்தே 45 ரன்கள் தான்!

ரிஷப் பண்ட் 9 ரன்களில் நடையை கட்டினார். பின்னர் சேர்ந்த அஸ்வின், ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி பொறுமையாக ஆடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றது. ஷகில் அல் ஹசன் மற்றும் மெஹிடி ஓவர்களில் நேற்று எப்படி இந்திய அணி திணறியதோ, அதற்கெல்லாம் எதிர்மறையாக இருவரும் இன்று சுழலில் ரன்கள் சேர்த்தனர். ஷகில் அல் ஹசன் 2 விக்கெட்டும், மெஹிடி 5 விக்கெட்டும் கைப்பற்றியிருந்தனர். வேறு வழியின்றி வேகப்பந்து வீச்சில் வாய்ப்பு தேடிய ஷகில் அல் ஹசனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. டஸ்கின் அகமது ஒரு ஓவரும், கலீல் அகமது 2 ஓவர்களும் வீசியிருந்தனர்.

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் ராகுலின் மொத்த பங்களிப்பு 57 ரன்கள்!

இந்திய அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மெஹிடி வீசிய ஓவரில் அஸ்வின் ஒரு சிக்சர், ஒரு 2, 2 பவுண்டரிகள் விளாசி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வங்கதேசத்தை ஒயிட் வாஷ் ஆக்கியுள்ளது. அதிகப்டசமாக அஸ்வின் - ஷ்ரேயாஸ் ஜோடி 8ஆவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர். இதற்கு முன்னதாக 1985 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான கொழும்பு டெஸ்ட் போட்டியில் கபில் தேவ் - லட்சுமண் சிவராமகிருஷ்ணன் ஜோடி 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்திருந்தனர். இதே போன்று 1932 ஆம் ஆண்டு நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அமர் சிங் - லால் சிங் ஜோடி இங்கிலாந்துக்கு எதிராக 8ஆவது விக்கெட்டுக்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்திருந்தனர்.

அஸ்வின் முதல் இரண்டு இன்னிங்ஸிலும் முறையே 4 விக்கெட் மற்றும் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றி 12 மற்றும் 42 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் மேன் ஆஃப் தி மேட்ச் விருது அவருக்கு வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர், எங்களுக்கு அடுத்து பேட்டிங் கிடையாது. ஷ்ரேயாஸ் ரொம்ப அழகாக பேட்டிங் செய்தார். வங்கதேச அணி வீரர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள். முதலில் தட்டி தட்டி விளையாடினாலே போதும் என்று நான் நம்புனேன். அதே போன்று செயல்பட்டேன். எளிதான மேட்சை இப்படி இக்கட்டான நிலைக்கு கொண்டு வந்து எங்களுக்கு பிரெஷர் கொடுத்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios