Asianet News TamilAsianet News Tamil

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் ராகுலின் மொத்த பங்களிப்பு 57 ரன்கள்!

வங்கத்திற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் கே எல் ராகுல் மொத்தமாக 57 ரன்கள் மட்டுமே எடுத்து தானும் ஒரு மோசமான பார்மில் இருப்பதை நிரூபித்து காண்பித்துள்ளார்.
 

Indian Test Captain K L Rahul Scored 57 runs in both test matches against Bangladesh
Author
First Published Dec 25, 2022, 10:58 AM IST

வங்கதேசத்தில் சுற்றுப்பணம் மேற்கொண்ட இந்திய அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கி இழந்த நிலையில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தற்போது 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 314 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய வங்கதேச அணி 2ஆவது இன்னிங்ஸில் 231 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் 145 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த எளிதான இலக்கை கூட இந்திய அணி மிகவும் கடினமாக இலக்காக மாற்றிவிட்டது.

மோசமான பார்மில் விராட் கோலி: 2 டெஸ்ட் ஸ்கோரும் சேர்ந்தே 45 ரன்கள் தான்!

தற்போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்வின் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் நிதானமாக ஆடி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது டெஸ்ட் கேப்டனாக திகழும் கே எல் ராகுல் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 22 ரன்கள் எடுத்தார். 2ஆவது இன்னிங்ஸில் 23 ரன்கள் எடுத்தார். 2ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 10 ரன்களும், 2ஆவது இன்னிங்ஸில் 2 ரன்களும் சேர்த்து மொத்தமாக 57 ரன்கள் மட்டுமே எடுத்து தான் ஒரு மோசமான பார்மில் இருப்பதை காண்பித்துள்ளார்.

BAN vs IND: நானே அவுட்டான கடுப்புல இருக்கேன்.. இவனுங்க வேற..! வரிந்து கட்டிய கோலி.. வைரல் வீடியோ

பவுலர் கூட அடிக்கும் நிலையில், அதிரடி ஆட்டக்காரராக இருந்து கொண்டு தடுப்பாட்டத்தில் ஈடுபட்டால் இது போன்ற நிலைமை தான் வரும். பந்து வீச்சாளர்கள் தங்களது பங்கிற்கு விக்கெட்டுகள் எடுத்துக் கொடுத்தும், அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு இந்திய அணியை வெற்றிக்கு கொண்டு செல்லும் கேப்டனே சிறந்த கேப்டன். ஒரு கேப்டன் தான் மட்டும் நன்றாக விளையாடுவது மட்டுமின்றி மற்றவர்க ஒரு கேப்டன் எப்படி இருக்க கூடாது என்பதற்கு ராகுல் உதாரணமாக திகழ்கிறார்.

IPL 2023: குறைவான தொகையில் நிறைவான தேர்வு.. KKR அணியில் ஆதிக்கம் செலுத்தும் தமிழக வீரர்கள்! வலுவான ஆடும் லெவன்

Follow Us:
Download App:
  • android
  • ios