Asianet News TamilAsianet News Tamil

கோலியின் ஆட்டிடியூட் பற்றி பிசிசிஐயிடம் பற்றவைத்து கோலிக்கு ஆப்படித்த சீனியர் வீரர் யார்..? வெளிவந்த ரகசியம்

கோலியின் மோசமான அணுகுமுறை குறித்து பிசிசிஐயிடம் ஒரு சீனியர் வீரர் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், அது யார் என்பது தெரியவந்துள்ளது.
 

ravichandran ashwin complained against virat kohli to bcci says reports
Author
Chennai, First Published Sep 28, 2021, 4:27 PM IST

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, டி20 உலக கோப்பையுடன் டி20 அணிக்கான கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். 3 விதமான அணிகளுக்கும் கேப்டனாக செயல்படுவதால் பணிச்சுமை அதிகமாக இருப்பதல், பணிச்சுமையை குறைத்துக்கொள்வதற்காகவே கோலி கேப்டன்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்தாலும், உண்மையான காரணம் அது அல்ல என்பது அனைவரும் அறிந்ததே.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் தனது ஆஸ்தான ஸ்பின்னரான யுஸ்வேந்திர சாஹலை எடுக்குமாறு தேர்வாளர்களிடம் விராட் கோலி தெரிவித்திருக்கிறார். ஆனால் கடந்த சில சீசன்களாக ஐபிஎல்லில் சிறப்பாக பந்துவீசிவரும் இந்தியாவின் சீனியர் ஸ்பின்னர் அஷ்வின் அணியில் எடுக்கப்பட்டார். அஷ்வின் மீண்டும் அணியில் எடுக்கப்பட்டதில் ரோஹித் சர்மாவின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. அவர் தான் அஷ்வினை அணியில் எடுக்க வலியுறுத்தியிருக்கிறார். இந்த தகவலும் இந்திய அணி அறிவிக்கப்பட்டபோதே வெளியானது.

அணி தேர்வில் தான் நினைத்ததை சாதிக்க முடியவில்லை என்ற அதிருப்தி கோலிக்கு இருந்திருக்கிறது. அதுமட்டுமல்லாது, விராட் கோலியால் ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்று கொடுக்க முடியவில்லை என்ற அதிருப்தி பிசிசிஐக்கு இருந்துவந்த நிலையில், கோலியின் கேப்டன்சி மீதான அதிருப்திக்கு உரமூட்டும் விதமாக, கேப்டன் கோலியின் மோசமான ஆட்டிடியூட் குறித்து சீனியர் வீரர் ஒருவர் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் புகார் அளித்தார்.

விராட் கோலியை ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் நீக்க பிசிசிஐ பரிசீலித்ததாக தகவல் வெளியானது. தன்னிடம் இருந்து கேப்டன்சி பறிக்கப்பட்டால், அது ரோஹித் சர்மாவிடம் தான் கொடுக்கப்படும் என்பதை அறிந்த கோலி, 2023 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை வரை ஒருநாள் அணியில் தனது கேப்டன்சி பதவியை தக்கவைக்க நினைத்தார். அதனால் ரோஹித்தை துணை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, இளம் வீரர் ஒருவரை துணை கேப்டனாக நியமிக்குமாறு பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்தார்.

இதற்கிடையே, ஒரு கேப்டனாக கோலியின் மோசமான ஆட்டிடியூட்  மற்றும் அடத்தால்  கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு சீனியர் வீரர், கோலியின் மோசமான ஆட்டிடியூட் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் புகார் அளித்தார். இவையனைத்தும் ஒருசேர நடக்க, இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து, டி20 உலக கோப்பைக்கு பிறகு விலகுவதாக கோலி அறிவித்தார்.

இந்நிலையில், கோலி குறித்து பிசிசிஐயிடம் புகார் அளித்த வீரர் யார் என்பது தெரியவந்துள்ளது. அது சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் தான் என்று தெரியவந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான   டெஸ்ட் தொடரில் அஷ்வினை அணியில் எடுக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்தியும் கூட, கடைசி வரை 4 டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு போட்டியில் கூட அஷ்வினை கோலி எடுக்கவில்லை. இது அனைவருக்குமே பெரும் வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. முழுக்க முழுக்க ஈகோ காரணத்தினாலேயே கோலி அஷ்வினை எடுக்கவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது.

இந்நிலையில், விராட் கோலியின் செயலால் கடும் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்த அஷ்வின், கோலியின் அணுகுமுறையை பற்றி பிசிசிஐயிடம் புகார் அளித்திருக்கிறார். அணியில் தனக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியதாகவும் கோலி மீது புகார் கூறியுள்ளார்.

ஒரு சீனியர் வீரர் பிசிசிஐயிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், அந்த ஆப்பை அடித்துவிட்டது அஷ்வின் தான் என்று இப்போது தெரியவந்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios