India vs England Test: முதல் இந்திய வீரராக இங்கிலாந்திற்கு எதிராக 100 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்த அஸ்வின்!

இங்கிலாந்திற்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை ரெவியூ மூலமாக எடுத்ததன் மூலமாக ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரே அணிக்கு எதிராக 100 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

Ravichandran Ashwin became the first Indian player to take 100 wickets against England in 4th Test Match at Ranchi rsk

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. இதில் இந்திய அணி சார்பில் ஆகாஷ் தீப் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டார்.

Mohammed Shami: சுப்மன் கில்லுக்கு சிக்கல், ஷமி விலகல் – டி20 உலகக் கோப்பைக்கும் டவுட் தானாம்!

வழக்கம் போல் இந்த போட்டியிலும் ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் வீசிய 4ஆவது ஓவரில் ஜாக் கிராவ்லி கிளீன் போல்டானார். ஆனால், அது நோபாலாகவே ஏமாற்றம் அடைந்தார். அதன் பிறகு பென் டக்கெட் விக்கெட்டை கைப்பற்றி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்தார்.

 

 

Akash Deep: அந்தரத்தில்  பல்டி அடித்த ஆஃப் ஸ்டெம்ப் – விக்கெட் எடுத்தும் ஏமாந்து போன ஆகாஷ் தீப்!

அதே ஓவரில் ஆலி போப் விக்கெட்டையும் எல்பிடபிள்யூ முறையில் எடுத்தார். அதற்கு நடுவர் அவுட் கொடுக்க மறுக்க, ரெவியூ மூலமாக கேப்டன் ரோகித் சர்மா பெற்றுக் கொடுத்தார். இதே போன்று தான் கடந்த போட்டியில் தனது 500 மற்றும் 501ஆவது விக்கெட்டுகளை கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஜானி பேர்ஸ்டோவ்வை எல்பிடள்யூ முறையில் அவுட்டாக்கினார்.

IVPL 2024: கிரிக்கெட் ஜாம்பவான்கள் விளையாடும் ஐவிபிஎல் – வரும் 23 ஆம் தேதி ஆரம்பம்!

ஆனால், அதற்கு நடுவர் அவுட் கொடுக்க மறுக்க, ரோகித் சர்மா ரெவியூ செல்ல டிவி ரீப்ளேயில் அவுட் என்று தெரியவர நடுவரும் அவுட் அறிவித்தார். இதன் மூலமாக ஒரே அணிக்கு எதிராக அதுவும் இங்கிலாந்துக்கு எதிராக 100 ஆவது விக்கெட்டை கைப்பற்றி புதிய சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்திற்கு எதிராக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். டெஸ்ட் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக 1000 ரன்கள் எடுத்ததோடு, 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios