சுவாரஸ்யம் ஏற்பட 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டிகளை 40 ஓவர்களாக குறைக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி ஆலோசனை வழங்கியுள்ளார். 

ஒரு காலத்தில் முடிவில்லாத நாட்களுடன் தொடங்கப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியனது 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியாக மாற்றப்பட்டது. அப்படி டெஸ்ட் போட்டிகள் 5 நாட்கள் நடந்தாலும் ஒரு சில போட்டிகள் முடிவில்லாமல் டிராவில் முடிந்த நிலையில், ரசிகர்களை கவரும் வகையில் ஒரு நாள் போட்டி கொண்ட கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 1970 ஆம் ஆண்டு 60 ஓவர்கள் கொண்டதாக ஒரு நாள் கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சாம்பியனை தீர்மானிக்கும் உலகக் கோப்பையும் இந்த வகையான கிரிக்கெட்டை மையப்படுத்தி நடத்தப்பட்டது. இதனால், கடந்த 1980 ஆம் ஆண்டுகளில் ஒரு கிரிக்கெட் தொடர் மிகவும் பிரபலமடைந்த நிலையில், அது 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.

இலங்கையின் கனவு கோட்டையை தகர்த்து இந்தியாவுக்கு வழிகாட்டிய நியூசிலாந்து - முதல் டெஸ்டில் த்ரில் வெற்றி!

இதையடுத்து, 2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட டி20 போட்டிகளுக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. அதோடு ஐபிஎல் தொடரும் உலகம் முழுவதும் பிரபலமடைந்த நிலையில், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடருக்கு ரசிகர்களின் ஆதரவு குறைந்தது. எனினும் தரத்துக்கு டெஸ்ட் கிரிக்கெட் என்றும், பணத்திற்கு டி20 கிரிக்கெட் என்றும் வீரர்களின் கவனம் திரும்ப ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு மவுசு குறைய தொடங்கியது. 

ஆடாம ஜெயிச்சோமடா, சும்மா கெத்து காட்டும் இந்தியா - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி!

எவ்வளவு தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்கள் வந்தாலும் சாம்பியனை 50 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பை தான் தீர்மானிக்கிறது என்பதால், ஒரு நாள் கிரிக்கெட் மிக அவசியமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், ஒரு நாள் கிரிக்கெட்டை மீண்டும் சுவாரஸ்யமாக்குவதற்காக இந்தியாவில் வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்கும் 50 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளை 40 ஓவர்களாக குறைக்கலாம் என்று கிரிக்கெட் வர்ணனையாளரும், முன்னாள் இந்திய பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி ஆலோசனை வழங்கியுள்ளார்.

21 வருடத்திற்கு பிறகு நிறைவேறிய 7 வயசு ஆசை: ரஜினியை சந்தித்து மகிழ்ந்த சஞ்சு சாம்சன்!

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு ரசிகர்களிடையே ஆதரவு அதிகரிப்பதற்கு இனி வரும் காலங்களில் 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட்டை 40 ஓவர்களாக குறைக்க வேண்டும். நாங்கள் விளையாடிய காலங்களில் அது 60 ஓவர்களாக இருந்தது. அப்போது அதன் மீதான சுவாரஸ்யம் குறைய தொடங்கியதால் அது 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில், 50 ஓவர்களை 40 ஓவர்களாக குறைக்க வேண்டிய நேரமும், காலமும் வந்துவிட்டது. காலத்திற்கேற்பவும், ரசிகர்களுக்கு உண்டாகும் ஆர்வத்தின் காரணமாகவும் கிரிக்கெட்டின் வடிவத்தை குறைக்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

இதே போன்று தினேஷ் கார்த்திக் கூறியிருப்பதாவது: ஒரு நாள் கிரிக்கெட் தொடர் அதனுடைய அழகை இழந்து வருகிறது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கு இருக்கும் வரவேற்பு ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு இருப்பதில்லை. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை டி20 உலகக் கோப்பை கொண்ட தொடர் நடப்பதால், ஒரு நாள் இரு தரப்பு தொடர் என்பது தேவையற்றது என்று கூறியுள்ளார்.