டி20 உலக கோப்பை அரையிறுதியில் இந்த 4 அணிகள் தான் மோதும்..! ரவி சாஸ்திரி அதிரடி
டி20 உலக கோப்பையில் எந்த 4 அணிகள் அரையிறுதியில் மோதும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆருடம் தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பை தொடர் வரும் 16ம் தேதி முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அனைத்து அணிகளும் ஆஸ்திரேலியாவிற்கு சென்று பயிற்சி போட்டிகளில் ஆடி தீவிரமாக தயாராகிவருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம்.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை போட்டிகள் தியேட்டரில் நேரலையாக ஒளிபரப்பு..!
இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகளும் வலுவாக திகழ்கின்றன. டி20 உலக கோப்பை தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான டி20 தொடரை இங்கிலாந்து அணி வென்றது அந்த அணிக்கு பெரும் உத்வேகத்தையளித்துள்ளது. அதேவேளையில், ஆஸ்திரேலிய அணிக்கு மரண அடியாக விழுந்துள்ளது.
எனவே டி20 உலக கோப்பையை வெல்ல அணிகளுக்கு இடையே போட்டி மிகக்கடுமையாக இருக்கும். இந்நிலையில், டி20 உலக கோப்பையில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், எந்த அணிகள் ஃபைனலுக்கு செல்லும், எந்த அணி கோப்பையை வெல்லும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க - மகளிர் ஆசிய கோப்பை: அரையிறுதியில் தாய்லாந்தை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது இந்திய அணி
அந்தவகையில், ரவி சாஸ்திரியும் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகளும் டி20 உலக கோப்பை அரையிறுதியில் ஆடும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.