Asianet News TamilAsianet News Tamil

IPL 2022 ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக புதிய பயணத்தை தொடங்கும் ரவி சாஸ்திரி..! எந்த அணிக்கு தெரியுமா..?

ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக களமிறங்கும் அகமதாபாத் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளார் ரவி சாஸ்திரி.
 

ravi shastri likely to be appointed as head coach of new ipl franchise of ahmedabad for ipl 2022
Author
Chennai, First Published Nov 7, 2021, 2:33 PM IST

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவரும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் இந்த டி20 உலக கோப்பை தொடருடன் முடிவடைகிறது. கடந்த 2017ம் ஆண்டிலிருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவருகிறார் ரவி சாஸ்திரி. கேப்டன் விராட் கோலிக்கும் ரவி சாஸ்திரிக்கும் இடையே நல்ல புரிதல் இருந்ததன் விளைவாகவும், சாஸ்திரி பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டதன் விளைவாகவும், 2019ம் ஆண்டுக்கு பிறகும் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

இதையும் படிங்க - எதுக்கும் பிரயோஜனமில்லாத அவரை நீக்கிவிட்டு இவரை ஆடவைப்பது இந்திய அணிக்கு நல்லது - டேனிஷ் கனேரியா

அந்தவகையில் டி20 உலக கோப்பையுடன் அவரது பதவிக்காலம் நிறைவடைவதையடுத்து, இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க - சீனியர் பிளேயர்ஸ்லாம் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க!2022 டி20 உலக கோப்பைக்கு இந்த 5 இளம் வீரர்களை ரெடி பண்ணுங்க-சேவாக்

டி20 உலக கோப்பையுடன் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அடுத்ததாக அவரை பயிற்சியாளராக நியமிக்க ஐபிஎல்லில் புதிதாக களமிறங்கும் அகமதாபாத் அணி அணுகியுள்ளது.

ஐபிஎல்லில் இதுவரை 8 அணிகள் ஆடிவந்த நிலையில் அடுத்த சீசனிலிருந்து கூடுதலாக 2 அணிகள் களம் காண்கின்றன. லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக இறங்குகின்றன. எனவே அடுத்த சீசனிலிருந்து ஐபிஎல்லில் 10 அணிகள் ஆடவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.

இதையும் படிங்க - உங்க டிரெஸ்ஸிங் ரூமுக்கு வரலாமா கோலி..? ஸ்காட்லாந்து வீரர்களின் ஆசையை நிறைவேற்றிய இந்திய அணி..!

இந்நிலையில், அடுத்த சீசனில் புதிதாக ஆடவுள்ள அகமதாபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்படலாம் என தெரிகிறது. அகமதாபாத் அணியை ரூ.5625 கோடிக்கு வாங்கிய சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ், ரவி சாஸ்திரியை தலைமை பயிற்சியாளராக செயல்பட கோரி அவரை அணுகியுள்ளனர். 

இதையும் படிங்க - சென்னையின் செல்லப்பிள்ளை, ஆன் & ஆஃப் ஃபீல்டு எண்டர்டெய்னர் பிராவோ..!

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய பின்னர் இதுதொடர்பான தனது ஒப்புதலை சாஸ்திரி தெரிவிப்பார்; அதன்பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க - நமீபியாவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறிய நியூசி.,! இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு கடினம்

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியை 4 ஆண்டுகள்  பயிற்சியாளராக இருந்து வழிநடத்திய சாஸ்திரியின் சேர்க்கை, அகமதாபாத் அணிக்கு ஐபிஎல்லில் பலம்சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க - எவின் லூயிஸின் ஆல்டைம் டி20 லெவனில் 5 இந்திய வீரர்கள்..! தல தோனி தான் கேப்டன்

Follow Us:
Download App:
  • android
  • ios