Asianet News TamilAsianet News Tamil

IPL 2021 அடுத்தடுத்த பந்தில் ரோஹித், சூர்யகுமாரை வீழ்த்திய ஆட்டத்தை திருப்பிய ரவி பிஷ்னோய்..!

136 ரன்கள் என்ற இலக்கை விரட்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரின் விக்கெட்டையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார் பஞ்சாப் அணியின் ரிஸ்ட் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய்.
 

ravi bishnoi takes rohit sharma and suryakumar yadav wickets in consecutive balls in ipl 2021
Author
Abu Dhabi - United Arab Emirates, First Published Sep 28, 2021, 10:12 PM IST

அபுதாபியில் நடந்துவரும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி. 10 போட்டிகளின் முடிவில் இரு அணிகளுமே தலா 8 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில், பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க இரு அணிகளுமே இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களம் கண்டன.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 135 ரன்கள் மட்டுமே அடித்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக மார்க்ரம் 42 ரன்கள் அடித்தார். அவருக்கு அடுத்தபடியாக தீபக் ஹூடா 28 ரன்களும், ராகுல் 21 ரன்களும் அடித்தனர். 

இதையடுத்து 135 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கிய மும்பை அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மாவை 8 ரன்னில் வீழ்த்திய ரவி பிஷ்னோய், அடுத்த பந்திலேயே சூர்யகுமார் யாதவை கோல்டன் டக் அவுட்டாக்கி அனுப்பினார். 

எளிய இலக்கை விரட்ட தொடங்கிய மும்பை அணியின் முக்கியமான 2 வீரர்களை இன்னிங்ஸின் 4வது ஓவரிலேயே அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி பஞ்சாப் அணியை ஆட்டத்திற்குள் கொண்டுவந்து நம்பிக்கையளித்துள்ளார். இதையடுத்து டி காக்குடன் சவுரப் திவாரி ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios