Irfan Pathan and Rashid Khan Dance: மைதானத்திலேயே இர்பான் பதான் உடன் டான்ஸ் ஆடிய ரஷீத் கான் - வீடியோ வைரல்!

பாகிஸ்தான் அணி உடனான வெற்றிக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் மைதானத்திலேயே இர்பான் பதான் உடன் டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

Rashid Khan Dancing with Irfan Pathan after Afghanistan Beat Pakistan by 8 Wickets Difference in World Cup 2023 at Chennai rsk

சென்னையில் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 22ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 282 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 74 ரன்கள் எடுத்தார். அப்துல்லா ஷபீக் 58 ரன்களும், ஷதாப் கான் 40 ரன்களும், இப்திகார் அகமது 40 ரன்களும் எடுத்தனர். பின்னர் கடின இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜத்ரன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி முதல் விக்கெட்டிற்கு 130 ரன்கள் குவித்தனர். இந்த ஜோடியை பிரிக்க பலம் வாய்ந்த பாகிஸ்தான் பவுலர்கள் திணறி வந்தனர்.

 Pakistan vs Afghanistan Cricket World Cup: வரலாற்றில் முதல் முறையாக 275+ ரன்கள் எடுத்து பாகிஸ்தான் தோல்வி!

இதில், குர்பாஸ் 53 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரஹ்மத் ஷா, ஜத்ரன் உடன் இணைந்து நிதானமாக விளையாடினார். இதில், ஜத்ரன் 113 பந்துகளில் 10 பவுண்டரி உள்பட 87 ரன்கள் குவித்து 13 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அதன் பிறகு வந்த கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிடி 45 பந்துகளில் 4 பவுண்டரி உள்பட 48 ரன்கள் சேர்த்தார். ரஹ்மத் ஷா 84 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 77 ரன்கள் குவித்தார். இறுதியாக ஆப்கானிஸ்தான் 49 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Pakistan vs Afghanistan: உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி சரித்திரம் படைத்த ஆப்கானிஸ்தான்!

இந்த வெற்றியின் மூலமாக முதல் முறையாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. மேலும், 7 ஒரு நாள் போட்டிகளுக்குப் பிறகு பாகிஸ்தானை வீழ்த்தி சரித்திரம் படைத்துள்ளது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் 2 ஆவது வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக ஆப்கானிஸ்தான் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடம் பிடித்துள்ளது.

வித்தியாசமான முறையில் ஷ்ரேயாஸூக்கு பதக்கம்; கேமராவில் வந்த போட்டோவை கழுத்தில் மாலையாக அணிந்த ஷ்ரேயாஸ்!

இந்த நிலையில், முதல் முறையாக பாகிஸ்தானை வீழ்த்திய மகிழ்ச்சியில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் டிரெஸிங் ரூமில் அதனை வெளிப்படுத்தியுள்ளனர். டிரெஸிங் ரூமில் உற்சாகமாக டான்ஸ் ஆடி மகிழ்ந்துள்ளனர். இந்த நிலையில் தான் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் மைதானத்திலேயே இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான இர்பான் பதான் உடன் உற்சாகமாக டான்ஸ் ஆடியுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

அதுமட்டுமின்றி சென்னையில் தங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு மைதானத்தில் வலம் வந்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

PAK vs AFG: ஷபீக், பாபர் அசாம் அரைசதம்: கடைசில வந்த இப்திகார் அதிரடி ஆட்டம் – பாகிஸ்தான் 282 ரன்கள் குவிப்பு!

 

 

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios